பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* } {} லா. ச. ராமாமிருதம்

பிறகு திடீரென்று ஓரிரவு ஒரு எண்ணம் அவனுக்கு உதித்தது.

அவன் தாய் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு, நூலை இழைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தள்ளவில்லை. ஆயினும் நூலை இழைத்தாக வேண்டும். மாவை ஆலையில் கொடுத்து ஒட்டியாக வேண்டும். துணி நெய்தாக வேண்டும். தொழில் நடந்தாக வேண்டும். பரம்பரைத் தொழில்:

அசதியுடன், விசுப்பலகையில் உட்கார்ந்தான்.

கஅம்மா! நாம் இந்த ஊரைவிட்டுப் போவோம். இங்கே இருக்கப் பிடிக்கல்லே-’

இழவி பொக்கை வாயைத் திறந்து புகைச்சிரிப்புச் சிரித்தாள்.

கநல்லாயிருக்குதே உன் பேச்சு! என்னமோ மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தனும் என்கிறையா? இதோ பார். நானும் மருமவளாய் இருந்து மாமியாராய் வந்திருக்கிறேன். எங்க நாளிலேயும் எங்க புருஷன் எங்களைக் கோபிக்கறதுண்டு, அடிக்கறதுண்டு. ஆனால் ஆக்காக, வீட்டுக்கு வந்த பொண்ணுங்களெல்லாம் வீட்டை விட்டுப் போனதில்லே. கொண்டவன் கொலை பண்ணால்கூட, படி தாண்டினதில்லே. அந்தக் கால மெல்லாம், அடிச்சாலும் குத்தினாலும் புருஷன்தான் ஆரிக, என்னதான் காலம் மாறிப்போச்சுன்னாலும் இந்த மாதிரிப் பொண்ணுங்களுக்கெல்லாம் பயந்து ஊரை விட்டு ஒடிப்போறதுன்னா என்னமோ அப்பா, எனக்கு மனம் இடம் கொடுக்கல்லே. நீ வேனுமானால் போ-இந்த புதுக் காலத்துப் புள்ளையா நான் பழங்கால்த்துப் பொருடி னாட்டியாவே இருந்துடறேன். எனக்கு இன்னும் ரொம்ப நாளில்லே. வயசாச்சு நான் புகுந்த வீட்டிலே செத்துப் பூடறேன். எனக்கு அதுதான் கெளரவம், இந்த வீட்டிலே, உன் தகப்பன் அவருக்கு அப்பா, அவங்க அப்பாவுக்கு ஆப்பர் எல்லோரும் வாழ்ந்து நல்லா ஆய்வந்த வீடு. நேத்திக்கு