பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞意器 லா, ச. ராமாமிருதம்

விதமான முயற்சியே எனக்கு ஒரு bore. அதனாலேயே அதை தான் படவில்லை. எதிலுமே எனக்கு அலுப்பு. எல்லாமே வசதியின் கோளாறுதான். வசதியே ஒரு பீடை

அப்படி உனக்குச் செல்வத்தின் பாரம் தாங்க முடியா விட்டால் வாரி வழங்கேன்! ஆஸ்பத்திரி, கோயில், அனாதை இல்லம், டொனேஷன்-என்ன இல்லை என்கிறாயா? அங்கேயும் எனக்கு ஒரு fixation தர்மம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அழித்தாலும் அழிப்பேன், கொடுக்க தாட்டேன். என்னுடன் அது ஒரு கொள்கையாகவே ஆகி விட்டது. கம்மாக் கொடுப்பதால் உண்மையில் சைத்தான் பட்டறையும், சோம்பேறிப் பண்ணையும், Corruptionஉம் தான் வளர்கின்றன. நான் கண்மூடத்தான் ஒட்டுண்ணி களும் பருத்துகளும் கழுகுகளும், நீ குறிப்பிட்ட பெயர்களில் காத்திருக்கின்றனவே ஒப்படைக்க என் உயிர் வேளையி னேயே என்ன அவசரம்?

  • கவியாணம் பண்ணிக்கொள்ளலாம் என்பாய், Epough, Drop it.

அப்புறம் இன்னொரு விஷயம். இப்படி எல்லாமிருந்தும், எல்லாவற்றிலும் அலுப்புத் தட்டியவனிடம், தனியாக ஒரு குரூரம் வளர்கிறது. தான் இன்பம் காண முடியாமையால், பிறரைத் துன்புறுத்துவதில் ஒரு இன்பம் அதுவே ஒரு பொழுது போக்கு அவனவன் ரத்தத்தைப் பரிசோதனை இசய்தால், அதன் அணுக்களில், நீரோக்களும், கலிகுலாக் களும்தான் நீந்துகிறார்கள். இதயத்தின் மர்ம அரங்கு Roma Arenaத்தான். மாறுதலாக வேறு ஏதேதோகூட இருக்கலாம். ஆனால் அவனவனுக்கு என்ன பார்க்கக் இடைக்கிறதோ அதுதானே!

So! உன் கலியாணத்தின் ரிஸெப்ஷனுக்கு நான் வந்த போது-ஜானவாசத்துக்கே எதிர்பார்த்ததாக நான் வந்ததும் கோபித்துக்கொண்டாய்-நான் ஒரு ரோஜாப்