பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 20 லா, ச. ராமாமிருதம்

பூச்சாண்டின்னு தள்ளிடற அளவுக்கு நமக்கும் முழுக்கத் தைர்யம் இல்லியே; உப்பும் இணலோடு ஆற்றில் கரைக்கற அஸ்தியும் சேர்ந்து, அதன் பேர் பயமோ, நம்பிக்கையோ, பரம்பரையா உடம்பில் ஊறிப்போயிருக்கே!

பாட்டிக்கு உடம்பிலே ஆயிரம் கோளாறு. கேட்கப் போனால் தாத்தாவுக்கு மேலே தாத்தாவுக்கென்ன, அவர் விழுந்தது ஒண்ணோடு சரி, பாட்டிக்கு B.P., சர்க்கரை, உப்பு ulcer, கண்ணில் சதை, கீல்வாயு, ஆஸ்துமா, பல்வலி, ஆனால் முக்கிண்டே முனகிண்டே வளைய வளைய வந்து கொண்டிருந்தாள். சரீரம் வேறு பொந்தகா". ஆனால் தாத்தாமாதிரி உயிர்ப்பிணம் ஆகல்வியே!

தாத்தாவும் பாட்டியும் அப்படி ஒண்னும் ஒத்துமையான தம்பதியில்லே. ஒரு சமயம், ஏதோ மனஸ்தாபம், மூணு வருஷம் பேசாமலிருந்தாளாம். Can you imagine? பேச்சு மட்டும்தான் இல்லை. மற்றபடி எல்லாம், வழக்கம்போல், கடிகாரக் கணக்கில்... தாத்தாவுக்குத் தினப்படி பூஜா திரவியங்கள், சமையல், பரிமாறல், வஸ்திரமடி மத்தியான ஆகாரம், ராத்ரி பால், படுக்கை-எல்லாம் மை போட்ட சக்கரக்கணக்கில் நடந்துகொண்டிருந்தது. தாத்தா ஒரு ஜாடைகூடக் காட்ட வேண்டாம். காட்டவில்லை. தாத்தா வின் வயிறு, நாக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாம் பாட்டிக்கு அப்படி ஒரு அற்றுபடி தாத்தாவுக்கு ஒரு தலை கூட வலிக்காது. பாட்டிக்கு என்னவாக உடம்பு இருந்தால்கூட தாத்தா திரும்பி நின்னுகூடப் பார்க்கமாட்டாராம் My pound offiesh Logyakarnih.

அப்புறம் எப்படித்தான் சமாதானமானாள்னு கேட் பேளே! ஒரு சிராத்தத்தின்போது, ஒளபாசனத்துப் புல் பிடிக்க, சமையல்கட்டில் வேலையாயிருந்த பாட்டியைக் கூப்பிடும்படி ஆயிடுத்தாம். மாமியைக் கூப்பிட சாஸ்திரிகள் மறுத்துவிட்டார். இந்த நியாயப்படி நித்யானு ஷ்டான