பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு ፲ 23

தலைப்பை விரித்து, முழங்கையே தலைக்கு உயரமாகப் படுத்துவிட்டாள் பாட்டி தினம் எங்கே படுத்துண்டிருந் தாள்னு அசட்டுக் கேள்வி கேட்காதீர்கள். இது தனிப்பட்ட படுக்கை-அல்ல, ஸ்மிக்ஞை, அப்புறம் எழுந்திருக்கவே யில்லையா, குளிக்கல்லியா, சாப்பிடல்வியா வளைய வரல் லையா? Don't be Siliy. எனக்குக் கோபம் வரது. எல்லாம் முறைப்படித்தான் நடந்துகொண்டிருந்தது. தன் கையா லேயே தாத்தாவுக்குப் பணிவிடைகள் உள்பட. ஆனால் அன்று எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை, தை, பகுளபஞ்சமி தினத்தன்று விடியற்காலை வேளையில் பாட்டி, இந்த உலகத்தை நீத்தாள். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, தாத்தாவின் உயிரும் பிரிந்தது.

ஒரே சிதையில் தகனம். விஷயம் காட்டுத் தீயாகப் பரவி, ஊரும், சுற்றுவட்டாரமும் சமுத்ரம் புரண்டு, மயானம் கொள்ளல்லே. தேர்த்திருவிழா மாதிரி ஜேஜே . அந்தப் பேச்சு ஆறுமாசத்துக்கு. அதன் தஹறிப்பு தணியல்லே. வீடு' யாத் திரை ஸ்தலமாப் போச்சு,

இந்த விசுப்பலகையா, இதன் அடியிலா, இங்கேயா?” நமஸ்காரம் பண்ணிக்கொண்டுவந்த தேங்காயை உடைத்து, வெற்றிலைப்பாக்கு மஞ்சளோடு மடியில் கட்டிக்கொண்டு, தொழுதுவிட்டுப்போன பெண்டிர் எத்தனைபேர்? அந்தக் காலம். சொன்னாலும் இப்ப நம்புவாளா?

என் பாட்டி இருந்தாளே-அல்லது இருக்காளேயா? எதைச் சொல்றது? பொல்லாத பாட்டி, மஞ்சள் குங்குமத் தோடு தான் முந் திண்டுடனும்னு ஒரே எண்ணம், ஒரே ######, she simply willed her death into coming. già நாளில் இது நடந்ததுன்னா. அந்த நாளில் ஒருத்தி புருஷன் உயிரை யமனிடமிருந்து பிடுங்கிண்டு வந்தாள். ஒருத்தி தனக்குப் புருஷன் தக்கணும்னு உலகத்துக்கே விடியாம. இருக்க அடிச்சுட்டான்னா ஏன், நடந்திருக்காது? ஏன்