பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியதர்சனி

பார்த்த பிம்பத்தின் உருவில் உன்னை நான் சிருஷ்டிக்க முடியாதா? மாலையில் செவ்வான குண்டத்தினின்று, அல்ல இந்தக் கிணற்றிலிருந்தே நீ ஏன் எழக்கூடாது? தவம் என்பதே என்ன, ஒரு எண்ணம். ஒரே எண்ணத்தின் தீவிரம் தானே !

ஒரு பாதாமிக் காய் என் தலைமீது விழுந்தது. என்ன, என்னை மண்டையில் தட்டி உட்கார வைக்கிறாயா?

நான் பைத்யமே ஆகிவிட்டேனா?

அவளுக்கும் அவளுடைய வெண்டைச் செடிக்கும் ஏதோ பேச்சு மெளனத்தில் நடந்துகொண்டிருக்கி

வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்கிறேன்.

மது, அவன் தனியாயில்வே நேரே என்னிடம் வரு கிறார்கள். மஞ்சள் க்ரீம் ஜிப்பாவில் மெலிந்து, உயரமாய் வருகிறான்.

அப்பா, அம்மா சேர்ந்து தில்லுங்கோ. எங்களை ஆசீர்வதியுங்கள், நமஸ்கரித்து எழுந்து நிற்கிறார்கள். அவளுக்குச் சேவிக்கத் தெரியவில்லை. மண்டியிட்டு, தலை யைத் தரையில் அழுத்தி மீண்டும் மண்டியாகி, மண்டியி லிருந்து எழுகிறாள். பின்னல் பூமியில் புரள்கிறது. தாழம்பூச் சிவப்பு

நன்னாயிரு மகராஜியா - அவன் தாயார் திகைத்து நிற்கிறாள்.

அப்பா நான் பொய் சொல்லியிருப்பேன். ஆனால், உங்களை ஏமாற்றியதில்லை. அப்பா! இவள் என்னை நம்பி, தன் பெற்றோரையே துறந்துவிட்டு வந்திருக்கிறாள். அப்பா இவளும் மேஜர் சட்டப்படி இவள் ஃப்ரி அப்பா, இவள் பேர் அமீர்ஜான்.'

மதுவின் தடலடி பாணி அவன் கண்களில் ஒரு கண் கைாடிச் சாமான் தைரியம், துணிச்சல், விளிம்பு பிசகினால்