பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 霊45

அவள் தலையை உதறுகையில் நடு வகிடிலிருந்து இரு பக்கங்களிலும் கூந்தலின் வீழ்ச்சிகள், கத்தி வீச்சுக்கள் போல் அலைந்தன.

உலகம் பூரா ஒரே அம்மா’’ முனகினேன்.

ஆ, அதையும் எழுதியிருக்கேள். ஒருவேளை அது தான் என்னை இங்கே இழுத்ததோ என்னவோ?’’

தலைக்கு நேரே பூவரசங்கிளையில் கூட்டில் குஞ்சுகளின் ஆரவாரம். தாய்ப்பகதி திரும்பியிருக்கிறது. இனி இன்று வெளியே போகாது.

  • அம்மா artist, அவள் ஒவியம் தீட்டவில்லை. கதை எழுதவில்லை. கவிதை புனையவில்லை. ஆனால் artist, இன்னதென்று வார்த்தையாலோ விரலாலோ தொடடுச் சொல்ல முடியாது. ஆனால் அது அவளிடமிருந்தது. The elusive it. s^prEN 6v& Gl3 ft GSSET ft 6it, “yow kncw what I meaா? தான் அபூர்வமான நல்ல நேரங்களில் அப்பாவே Qært &am rf. • • gaisir p56vav Stock; yoW know what I meam? மேன்மக்கள் அதாவது அவள் உடுத்தினது பருத்தி ஆனாலும் அவள்மேல் அது பட்டின் அந்தஸ்து பெற்றது. வாக்கு அவள் நாக்கு நுனியிலிருந்து உதிர்கையில், தனி ஒசை, நளினம், ஜதி கொண்டன. அவளைப்பற்றி நிறையப் பேசறேன். அப்படியும் நான் எண்ணியபடி வெளிக்கொண்டு வரப் போதவில்லை.

அடங்கினாள்.

காத்திருந்தேன்.

தெருவிளக்குப் பொட்டென அனைந்தது. எங்களை இருள் சூழ்ந்துகொண்டது. இது இப்படித்தான் மக்கர்’ பண்ணும். .

அப்போத்தான் பூத்த மலர் மணம் எதிர்த்திசையினின்று வருகிறது.

Lി.--10