பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼蝶穆 லா. ச. ராமாமிருதம்

பாயறது எனக்கே தெரியறது. என் வெட்கம், என் பெருமை எனக்கே சொத்தம் இப்படியும் ஒரு பித்து நிலை உண் டோடி?

ப்ரபுவின் குரல் அவளுடைய மிதப்பலிலிருந்து அவளைக் இழே இழுத்துக் கொணர்ந்தது. அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்: யு n, இன்றிரவு ரயிலில் நாங்கள் மதறாஸ் திரும்ப வேண்டும். நாளை நான் ட்யூட்டியில் சேர வேண்டும். டில்லியிலிருந்து இங்கே வரை இந்த இருபது தாட்களில் ரங்கராட்டினம் சுற்றினமாதிரியிருக்கிறதே யொழிய, எங்கேயும் எதையும் ஆற அமரத் தங்கி அனுபவிக்க முடியவில்லை. ரயில் சார்ஜ் வரை பேங்க் கொடுக்கிறது. இன்றிலிருந்து மூன்று வருஷங்கள் கழித்துத்தான் மறுபடியும் இந்த வாய்ப்பு.’’

சஓ, நீங்கள் அப்போது டில்லிக்குப் போயிருக்கிறீர் களா?' '

ஆம், மாம்."

சஆக்ரா? தாஜ்மஹால்?’’

ஆம், மாம்!'

ச. தாஜ்மஹால், அதுவே ஒரு அழகிய கனவல்லவா?*

உள்ளங்கைகளை ஒன்றோடொன்று அழுத்திக்கொண்டு, அந்த நினைப்பில் அவள் கண்கள் ஒளிர்கையில் அவைகளில் நீலம் பெருகுவது பிரமையா? அசலா?

அைைள அழகி என்று சொல்வதற்கில்லை; ஆனால் நிச்சயமாக வசீகரம் கூடவே தலைமயிரின் செங்கானல், அவளைச் சிந்திப்பதில் ஒரு கணம் தன்னை இழந்த ப்ரபு சட்டென சமாளித்துக்கொண்டு மீண்டான்.

ஆமாம், தாஜ்மஹால் அழகுதான். மிகமிக அழகு. சலவையில் கவிதை, காதலுக்கு நினைவுச் சின்னம். நிஜமும், கட்டுக்கதையுமாக விஷயங்கள் அதைச் சூழ்ந்துகொண்டு,