பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

ஹே தேவி! கங்கா நதியை கங்காதேவி என்று தொழுகிறோம். யமுனையை யமுனாதேவிகங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, காவேரிஇவைபோலும் உன்னைச் சிந்தாதேவி என்றால் என்ன? இந்நதிகளைக் காட்டிலும் நீ எத்தனையோ முன்னவள். இவை மட்டுமா? அமேஜான், முஸ்ஸோரி, மிஸ்ஸளிப்பி, நைல், ஜோர்டான், யாங்க்ட்லே, மஞ்சள் நதி-ஏன், சமுத்ரங்களே உனக்கு அப்புறம்தான்.

ஆனால், இத்துணை தழைந்த மூதும் உன்னைப் பாதிக்கவில்லை. நீ நித்ய யெளவ்வனி. அன்றன்று, அவ்வப் போது, புதுமையை வெளிப்படுத்திய வண்ணமாயிருக் கிறாய். எங்களுக்குப் புதிது. ஆனால் தன்னில் எத்தனை பழைமையோ?

தேவி, சிருஷ்டிக்குப் பின் சிந்தனை உண்டாயதா அல்லது சிந்தனைதான் சிருட்டித்ததா? Lat there be light, and there was light.” géogy giraiyGib artilia Gip, aff, கெனவே ஒன்றுக்கொன்று பேரல’லா? அல்ல இணைந்தா? இந்தக் கேள்விக்கு மட்டும் நேர்ப் பதில் கிடைத்து விட்டால்