பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் # 77

கூடத்து அறையிலிருந்து பூஜை மணி. சாம்பிராணி வாசனை மூக்கைத் துளைக்கிறது.

ஏ பையா, எட்டிப் பார்க்காதே-’’ ஆனால், எட்டிப் பார்க்கிறேன். தண்ணி இருக்கிற இடம் சட்டுனு தெரியல்லே. இருட்டு: ஆழம்,

ஒருவேளை வெய்யில் இன்னும் உசந்தால், உள்ளே பட்டால், மேனோக்கறேன். மாமரத்தில் இலைகள் சூரியனில் தங்க இலைகளாய்த் தகதகக்கறது. கொல்லை, தன் எல்லை யைத் தேடிண்டு, போயிண்டே இருக்கு. அத்தனை நீளம்,

கிணற்றடி ஒரே கலீஜ்", ஒருவர், தாம்புக் கயிறையும், பக்கெட்டையும் ஆக்ரமித்துக்கொண்டு குளிக்கிறார், ஒருவர் வேட்டி துவைக்கிறார். அவர் உடல் அசைவில் தொந்தி தனியாய் தொளக், தொளக் இரண்டு மாமிகள் பற்றுத் தேய்க்கிறார்கள்.

அம்பி, எட்டிக்கறியா?"

திரும்பிப் பார்க்கிறேன். இப்பத்தான் அவளைச் சற்து விவரமாகப் பார்க்க முடிகிறது. பின்கட்டில் துரளியில் குழந்தையை ஆட்டிக்கொண்டிருந்த மாமி, இடுப்பில் குடத்துடன், கொசுவக்கட்டில் நிற்கிறாள். அவளுடைய கோன வகிடுக்கும், புதுமையின் கலவை-என் கண்ணுக்குப் பழக்கமில்லையாகையால் வேடிக்கையாக இருந்தது. சிரிப்புக் கூட வந்துவிட்டது.

நான் சிரிக்க, அவளும் சிரித்தாள். ஏனென்று சரியாக இருவருக்குமே தெரியாது. அது இன்னும் சிரிப்பு மூட்டிற்று. கிணற்றடியின் இத்தனை ரகளையில் எங்கள் சிரிப்பு, வாய் விட்டுச் சிரிக்காத சிரிப்பு, தனித்தனிச் சிரிப்புகள் அஸ்திர சந்திப்பில் நடுகதியில் ஒருமித்து ஒரு சிரிப்பாகி, எங்களது சிரிப்பு. எங்களுக்கு மட்டுமே தனித்துப் போனது. அவளு

பி.-12