பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் | 93

வெட்கம் வேறு உண்மை வேறு. வாய்க்கால் இப்போது ஒரு தென்னஞ் சோலைக்குள் புகுந்துகொண்டது. போய் வா’ என்று அதற்குக் கையாட்டிவிட வேண்டுமா என்று தோன்றுகையில், தாழம் புதர்களிடையே வெளிப்படுகிறது.

நட, நட நடந்துகொண்டேயிரு.

ஆம், ரஸ்தாவும் நடக்கிறது. மேடு ஏறுகிறது. ஒரு வளைவில் பாலம் தென்படுகிறது. வாய்க்காலின் இரு கரை களும் திடீரென மணற் குன்று அலைகளாக உயர்ந்து விட்டன. ஒரமாக வந்துகொண்டிருந்த வாய்க்கால், இப் போது சாலையின் குறுக்கே பாலத்தின் கீழ் ஒடுகிறது.

கரை மேட்டில் இரு மணல் அலைகளின் இடைத் தாழ்வில் ஒரு ஸ்திரி இடுப்பில் குடத்துடன் தோன்றுகிறாள். கரைச்சரிவில் சறுக்கினாற்போல், தடதடவென இறங்கி, தண்ணிர் ஓரமாகக் குடத்தை வைத்துவிட்டு-ஆ ஆ! அவசரமாகப் புடைவையை அவிழ்க்கிறாள் முப்பது இருக்குமா? வாய்க்காவின் அடிவயிற்றில் கிடக்கும் கூழாங் கற்களின் மேல் கவனம்போல் பாலத்தின்மேல் குனிகிறேன்.

அவள் என்னைச் சட்டை செய்யவே இல்லை. புடைவைக் கொடுக்கை மோவாயால் மார்மேல் அழுத்திக் கொண்டு ரவிக்கையை உரித்தெறிகிறாள். அது கொப்புளம் போட்டுத் தண்ணிரில் மிதந்து செல்கிறது. புடவையை அதி வேகமாக இடுப்பில் சுற்றி நுனியை விலாவில் இறுக்கிச் செருகிக்கொள்கிறாள். சதையோ, உடலின் வரையோ, ஒரு இம்மிகூடவா காட்டாது? துறை ஸ்நானத்தில் சர்வீஸ் ஆனவள்போல் இருக்கிறது. ஏமாற்றத்தோடு பின்வாங்கு கிறேன். கால்கள் நடையைத் தொடர்கின்றன. அவள் கொக்கரிப்பு என்னைத் துரத்துகிறது.

வயசாச்சு மனுசனுக்கு ஏய், உனக் ί Dώλ! க்

இ! காளா? .