பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 菱紛む

அடக்கிய அழுகையில் அவனுடைய உதடுகள் தவித்தன. முகம் குங்குமம். சமாளித்துக்கொண்டு, தோளில் பையை மாட்டிக்கொண்டு பெரிதாகக் கொக்கரித்தபடி ஓடினான். பெருமூச்செறிந்தேன். சொல்ல இயலாத விசனம், என் கப்பல் கவிழ்ந்ததற்கு, என்னை உதறி விடுவித்துக்கொண்டு கரையேறி நடக்கிறேன்.

இந்த வாய்க்கால் எனக்கு ஏதோ போதிக்கத்தான் இப்படிக் கூடவே வந்துகொண்டிருக்கிறது.

என் ஓட்டம் என் கையிலிருக்கிறதா? ஒடுகிறேன், ஒடிக்கொண்டேயிருக்கிறேன். பயிருக்குப் பாய்ச்ச என்னை எங்கெங்கே வெட்டுகிறார்களோ அந்த வழி பாய்கிறேன். வரப்புப் போட்டுத் தடுத்தால் தடை படுகிறேன்; தேங்கு கிறேன். என்னைப் பற்றி, எதைப் பற்றியுமே சிந்திக்க அறியேன். என் தர்ய் மூல நதிக்கு ஒரு வேளை தனிப்புத்தி, தனிக் கோபம், தனி உணர்ச்சிகள் இருக்கின்றனவோ என்னவோ? ஆனால் நான் கவலையற்றவள் எதைத். தெரிந்து எனக்கென்ன ஆக வேண்டும்?'

இன்னொன்றும் சொல்லாமல் சொல்கிறது. உங்கள் வழியும் உண்மையில் என் வழிதான். உங்கள் இஷ்டத்துக்கு உங்களைப் பற்றி நீங்கள் எதுவேனுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அதோடு சரி. எண்ணத்துக்கும் நடப்புக்கும் எடை சம்பந்தமேயில்லை."

ஈசனே என் செயலாவது ஏதுமில்லை" ஏதோ பாட்டின் அடி இப்போ சமயம் பார்த்து நினைப்பின் ஆழத்தி லிருந்து மேல் வந்து மிதப்பானேன்?

ஆம், இதுவேதான் பேருண்மையாகத் தோன்றுகிறது: மேம்பாடுக்கு விருதாவாய், காரியம் அற்ற இந்த நடையில் எண்ணம் விழுந்ததற்கே முன் என்ன, பின் என்ன? இந்தச் செயலில் என்னை உந்திவிட்டதால் எங்கும் பரவிய உயிர் சக்தியின மகத்தான நோக்கம் ஏதோ நிறைவேறிக்கொண்