பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 207

சற்றுப் பின்தங்கி வந்த நடை, நான் அவளைப் பார்த்து விட்டதால் என் சம தூரத்தை அடைந்தது என் நடை ஏனோ அவளுக்காகவே அனுதாபத்தில் , அவளுக்குச் சரியாகத் தளர்ந்தது.

இருவர் நடக்கையில், ஒரு விஷயம் கவனத்துக்குரியது. நடை அதன் சுருதியைக் கண்டுவிட்டால் மூன்றாவது நண்பன் ஒருவன் கூடவே வருகிறான். மோனம், எங்கு, எப்போது சேர்ந்துகொண்டது தெரியாது. ஆனால் அதன் ஆதிக்கம்தான் ஓங்கி வருகிறது. ஆறுதலான ஆதிக்கம்.

இப்போது, இங்கு நாங்கள் நால்வர்- நான், அவள் மோனம், வாய்க்கால். -

எங்கள் மெளன நிலையில் என்னை நான் என்று பிரித்துக் கொள்வது அசம்பாவிதம் அஸ்ருதி,

நான் எனும் என் அகந்தையை இங்குக் கழற்றி அவன் ஆகிவிடுதலே இந்தச் சமயத்தின் சாந்தி, சுஸ்ருதி.

ஆகவே, அவன், அவள் மோனம், வாய்க்கால். இங்ஙனம், நான் அவனாய விரக்தி, வியப்பாயில்லை. இயற்கையாய், இயல்பாய் தன்வழியாய், அதன் விளை வாய் உள்ளமும் உடலும் ஒரு தனி லேசாய் அவனும் அவளும் ஒருவருக்கொருவார் ஊடே காணும் பளிங்குத்

தெளிவில்

மோனம் ஒரு வாயில் உள் நுழைந்ததும் வியாபிக்கும் விதானங்களை வியப்பது மனத்தின் ஏழைமை.

மோனம் மேலே ஸ்பரிசம் படா ஆலிங்கனம். மோனம் ஒரு வானம், மோனம், பல் படாத பாம்புக் கடி.

மோனம், லக்ஷ்மணக் கோடு, உள்ளே பத்ரம்.

மோனம், தன் மேல் நூற்ற கூடு.