பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம் 2夏莎

இல்லை எடுத்துச் செல்பவருக்கு: அவன் அப்படிச் சொல்ல வில்லை. ஆனால் ஆனந்தக் கூத்து யாவர் நெஞ்சிலும் எழுப்பிய சதங்கை ஒலி இதுதான்.

ஆடுகிறான், ஆட்டுவிக்கிறான்.

தியானத்தில் மூழ்கி, சிந்தனையைத் தோற்றங்களாகக் கண்டுகொண்டிருந்த நிலையில் மண்டையோட்டுள் ஒரு மின்னல் பளிச்சிட்டு தியானம் வெடுக்கென கலைந்து விழித்தான்.

இடப்பாகத்தில் அவள் இல்லை. அவனைப் பிரிந்து சென்ற பாதச் சுவடுகளின் குங்குமப் பிழம்பு தந்த தனி வேதனையில் இது பிரிவு என்று உணர்ந்தான். இடதுதோள் அப்படி வலித்தது.

தியானம் ஒரு வாடும் மலரே. வாடும் மலர்களே மணக்கும் மலர்கள். சுவடுகன் காட்டிய வழி பூலோகத்திற்கு இறங்கும் பாதை இறங்கினான்.

சுடலை ஆண்டியை, பித்தனைத் தவங்கிடந்து அவளே தான் வரித்தாள். எனினும் திடீர் திடீர் என்று அவளுக்குப் பழைய நினைப்பெடுத்துவிடுகிறது. நான் பர்வதராஜ குமாரி, ஹிமவான் புத்ரி, ஹைமவதி, தடாதகை, மதுரை மீனாகரி, தக்ஷன் புத்ரி. தாrாயணி, அவனுக்குச் சரியாக ஆட முயன்று, காளி வேஷம் காட்டினாலும் அவள் பெண். அதிலும் பேதை அவள் பேதமையின் ஆழம் இன்னும் எனக்குக் கிட்டிய பாடு இல்லை.

இந்தப் பேதமைக்குத்தான் ஆண்மை, வைராக்கியம். ஞானம், விவேகம், யதார்த்த உணர்வு யாவும் பலியா கின்றன. சீதையால் ராமன் இப்படித்தான் அழிந்தான். விஸ்வாமித்ரன் தவமிழந்தான். என்னையும் இவள் இப்படித் தான் அழிக்கப் பார்க்கிறாள். ஏனோ?