பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 # 8 லா, ச. ராமாமிருதம்

நெற்றிக் கண்ணைத் தாங்குகிறேன் மானைத் தாங்கு கிறேன், மழுவைத் தாங்குகிறேன்.

உன் கோபம் தாங்க முடியவில்லையே. இதயப் பேழை திறக்கின்றது. சத்யத்தின் மனம் வெளிப்படுகிறது. இப்போது யாது காரணம்? நீ கேட்டு நான் கொடுக்காமல் இன்னும் என்னிடம் என்ன உள்ளது?’’

இடப்பாகம் என்னுடையது என்று பெயர். ஆனால் வலப்பாகத்தில் நீங்கள் இல்லாது இடப்பாகம் எனக் கெதற்கு?’’

தேவி! நீ சொல்வது புரியவில்லையே! அவன் திகைத் தான். இடப்பாகம் போதவில்லை! முழுப்பாகமும் வேணும் என்கிறாயா? நான் ஒன்று சொல்கிறேன். வலப்பாகம் யாரும் தாங்க இயலாமையால்தான் நான் தாங்குகிறேன், உனக்கு அது வேண்டாம்; உனக்கு அது தருவதற்குமில்லை."

நானும் ஒன்று கேட்கிறேன். இடப்பாகம், வலப்பாகம் இரண்டுக்கும் இடைப்பாகம் என்று உளதோ? அவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். இதுவரை எனக்கு ஏன் தெரிய, வில்லை. தியானத்தின் இடம் அதுதான் போலும்; எத்தனை மர்மமான, ஈடற்ற இடம்! இடப்பாகத்தின் சக்திக்கும் வலப்பாகத்தின் ருத்ரத்துக்கும் சமன்கோல் இடம்!

676767 வாயடைத்துப் போயிற்று? அங்கு எவள் இருக் கிறாள். அல்ல அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய் கிறாள்:”

அவனுக்கு அதிர்ச்சி கண்டது. என்ன தேவி! என்ன

அபஸ்வரம் பேசுகிறாய்? அற்புதமான ஒரு கட்டத்திற்குப் போய் அங்கேயிருந்து தள்ளிவிட்டு நீயே விழுந்துவிட்டாய்!

சிருஷ்டி என்று என்ன தனி? விழிப்புதான் சிருஷ்டி, முதன் முதலில் நான்’ ஆக எனக்கு விழிப்பு நேர்ந்ததும் என்