பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多蕊岛 லா.ச. ராமாமிருதம்

சேது, நீ தினம் ஒரு வேளையானும் சமைச்சுக் கனும்டா ஒண்ணுமே முடியாட்டா, சாதம் வடிச்சுத் தயிர், பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி பண்ணி வெச்சுட்டுப் போறேன். அப்பளாம் சுட்டுக்கோ."
  • உத்யோகத்தில் அப்படியெல்லாம் ைக ய டி ச் சு க் கொடுக்க முடியாதப்பா. வயிற்றுப் பிழைப்பு விட்ட வழி தான் உண்டு."

அப்படியானா, ஒரு கலியாணத்தைப் பண்ணி வெச்சுட வேண்டியதுதான்.” r

சரியாப் போச்சு, நானே இன்னும் ஊணிண்ட பாடில்லே. கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல்.’

ஏண்டா என் தள்ளாமைக் காலத்தில் இப்படிப் படுத்தறேள்?’’

சிரித்தான், காலா வட்டத்தில் எல்லாம் சரியாப் போயிடும்பா."

ஆபத்தாமபஹத்தாரம் தாதாரம் ஸ்ர்வ ஸ்ம்பதாம்மணிசத்தம் கேக்கறாப்போல இருக்கே! ஆமாம், அவனே தான். ராமா, வயிற்றிலை பாலை வார்த்தையா? பாறையி லிருந்து எழுந்திருந்தார். "ராம மந்த்ரத்தைவிட மந்திரம் இல்லேடா சேது" -

விர்ர்ர்ட்ரென்று அவர் காலில் உராய்வதுபோல வந்து நிறுத் தி இறங்கினான். அவன் முகம் கடுத்தது.

  • அடைகாக்க ஆரம்பிச்சாச்சோன்னோ? வீட்டுக்குள்ளே இருந்தது போக வெளியிலேயே வந்தாச்சா? அதனால் நான் வந்துடுவேனா? உங்கள் உடம்பைப்பத்தி நீங்கள் என்ன நினைச்சுண்டிருக்கேள்?"
  • நீ கொஞ்சம் மரியாதை காட்டலாம் சேது" -