பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱盛4 லா, ச. ராமாமிருதம்

துலே சுத்திச் சுத்தி வந்து வந்த வழியைத் தேடினால் சிக்கல்லே. கிடைக்கல்லே. நான் உள்ளே போனது அத்புதம், கண்டதும் அத்புதம், வெளியிலே வந்தது அத்புதம்’

அவர்கள் போன பின்னர் அந்தப் பையன் சொன்ன து வெகுநேரம் புரிந்தும் புரியாமலும் உறுத்திக்கொண் டிருந்தது.

பகலும் இரவுமாய் மாறி மாறி நாட்கள் நகர்கின்றன. ஒரு சமயம் ஒடுகின்றன. ஒரு சமயம் தயங்குகின்றன. ஆனால் எந்த சமயமும் நின்றதில்லை.

என்னைச் சுற்றி வீடுகள் முளைத்துக் கொண்டிருக் இன்றன. காலியாகின்றன: குடித்தனங்கள் மாறுகின்றன. வயல்களில் கதிர்கள் பெருமூச்செறிகின்றன. ஏரி வற்று கிறது. மழை பெய்கிறது. தடித்த துாறல்கள் என்மேல் தமுக்கு வாசிக்கின்றன. மழை கொட்டுகிறது. ஏரி நிரம்பி வழிகின்றது. குளிர் கிட்டுகிறது. இலைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகின்றன. நான் ஏற்கனவே நிர்வாணம் தான். ஆனாலும் இப்போது அதுமாதிரி ஒரு உணர்வு தோன்றுகிறது. .

மரங்கள் ஒரு பக்கம் பட்டுப்போய்க்கொண்டே மறு. பக்கம் துளிர்க்கின்றன . ஏதேனும் நிகழ்ந்துகொண்டு வர்ணங்கள் நேர்ந்த வண்ணமிருக்கின்றன.

ஒரு தினம் எனக்கு அண்டைக் குன்றை மொய்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் அத்தனைபேரும் சட்டென இறங்கி ஒடிப்போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சத்தத்துடன் குன்று வெடித்தது. பெரிய விரிசல், பெரிய பள்ளம் விட்டுக்கொண்டு பெரிதும் சிறிதுமாய்க் கற்கள் சரிந்தன. அதை என்னவோ செய்திருக்கிறார்கள்.

எனக்கும் இந்தக் கதிதானே ஒருநாள் என்று: தோன்றினதுமே உள்ளே சில்”லென்றது. ஆகவே ஆயசு எனக்கும் கணக்கில்தான் இருக்கிறது. இது நல்லதா ,