பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹器 லா. ச. ராமாமிருதம்

கொன்றது. அதோடு என்ன செய்ய முடியும்! நான்தான் என் வசமேயில்லையே! விளக்கினிடை விட்டிற்பூச்சியாய் அன்றோ எரிந்தேன்!

"கண்ணம்மாள், தன் ஆசையைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாளானால், அதன் இன்பத்தின் துன்பத்தை ஸ்ஹிக்க முடியாது. அவ்வானந்தமே, பயங்கரமாயிருக்கும். விண் விண் என்று நெருப்புப்பொறி போன்று அவள் என்னைத் தஜித்தாள்.'

ஒவ்வொரு இரவும் என்னைக் கண்டால் வருஷக் கணக் காய்ப் பிரித்து கூடியதுபோல்தான் அவள் என் கழுத்தில் தன் கைகளைக் கோத்து இறுகக் கட்டும் வேகத்தில், எனக்கு மூச்சுத் திணறும். முகத்தோடு முகம் பதித்து, அவள் முத்த மிடும்பொழுது, என் உடலின் இரத்தமெல்லாம், ஒருங்கே மண்டையில் குபீல்' என்று பாய்ந்து, மூளை குழம்பும். திடீரென்று கீழே உட்கார்ந்து என் கால்களைத் தன் மார்பில் சோர்த்துக் கட்டிக்கொண்டு, "நான் மானிடப் பிறவியல்ல, நான் தேவதை- எனக்கு அநேக சக்திகள் உண்டு- ஆனால் நான் உன் அடிமை- நீ என் பர்த்தா-நீ எனக்குச் சொந்தம்... என்றெல்லாம் அவள் பிதற்றுவாள்.

"அவளுடைய மூர்க்கமான வாத்ஸல்யத்தின் வேகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் திடீ ரென்று இளைக்க ஆரம்பித்தேன். அதுவும் இராத்திரி யெல்லாம் துரக்கம் கிடையாது.

நான் என் அனுபவங்களைப்பற்றி வீட்டில் சொல்ல வில்லை; சொல்லவேண்டுமென்றே தோன்றவில்லை. சொன் னாலும் யார் நம்பப்போகிறார்கள்? அம்மாதான் நம்பு வாள். ஆனால், அவளைப் பயப்படுத்த எனக்கு இஷ்ட மில்லை. அவள் சுபாவமாகவே சற்று கோழை. தவிர, நாலைந்து மாதமாய் ஏதோ வைத்தியத்துக்குப் பிடிபடாத வியாதி அவளைப் பீடித்து கொஞ்சங் கொஞ்சமாய்த்