பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முத்தம் 68

அப்பவே நாக்கில் சுருக்."

பிடுங்கி எடுத்தேன். வெள்ளை வெள்ேரென்று டொடி முள். அதன் பிரதிபலிப்பாய் எண்ணம் உள் ஊறினதும் உடனே எழுந்த குமட்டலைத் தாங்கமுடியாமல் பாத் ரூமுக்கு ஒடினேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த் தனர். அவள் சிரிப்பு துரத்திற்று திரும்பிப் பார்த்தேன். மேல் வரிசையில் இரண்டு தெற்றிப் பற்கள் தெரிந்தன.

இன்று இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானம் பண்ணிவிட்டாள்.

“What a funny man you are!”

மெளனமாய்ச் சற்று நேரம் நடந்தோம். அவள் வீடு என் வழியில் இல்லை. ஆனால், ஷாப்பிங் செய்யனுமாம். நாளைக்கு தீபாவளியில்லே?" -

உங்களுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் மிஸ் டிார்வா;%

நான் மிஸ் இல்லை."

சரி, மிஸஸ் மார்வா...'

நான் மிஸஸ்ஸுமில்லை. *

இதென்ன புதிர்? என்னத்தை விளக்கம் கேட்பது?

பெருமூச்செறிந்தாள்.

தனிமை பயங்கரம் மிஸ்டர் அம்பி.

என்ன சொல்வது தெரியவில்லை,

"மிஸ்டர் மார்வா சிங்கப்பூர் போய் வருசம் பத்தாச்சு."

番 ஏன்?’’

நகைத்தாள் சம்பாரிக்கத்தான். உங்களவங்ககூடத் தான் போவல்லியா...துபாய், குவாயிட், மஸ்கட்."

போறாங்க மூணு வருடங்களுக்கு ஒருமுறை தாய், தகப்பன், பெண்டாட்டி பிள்ளைங்களைப் பார்க்க வராங்க."