பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 7錄

அவரிடமிருந்து புரண்ட கேவவில் அவரே மிரண்டு போனார்,

பையன் உஷாரானான். சமர்த்து, பாட்டி கதை மிச்சம் இனி இப்போ இல்லை. சமயம் பார்த்து அப்புறம்...

ஒருவருக்கொருவர் ஆதரவில் இருவரும் ஒருவருக் கொருவர் அவசியமாகிவிட்டனர். அவர்களிடையே தனி ரஹஸ்யங்கள், விழிப்பேச்சு, லங்கேதங்கள், குறும்புகள், பிறிடும் சிரிப்புகள், கும்மாளங்கள் கிளம்பின கண்ணெதிரே தொங்கிப்போன செடி ஜலம் கண்டு, மீண்டும் பச்சைப் பிடித்து நிமிர்வதுபோல, இவருக்கும் முகம் தெளிந்தது.

முகம் தெளிந்ததே அன்றி பையன் உடல் பூஞ்சையாகத் தானிருந்தான். கேட்டால் கிழவர் வந்ததுக்குப் பின் அவன் இன்னும் இளைப்பாய்த்தான் காட்டினான். கொடுக்கும் ஊட்டமும், தனிச் சத்துக்களும் எங்கேதான் போயினவோ? அவ்வப்போது தொண்டையைக் கனைத்துக்கொண்டான்.

மார்பில் சலங்கை குலுங்கிற்று.

ஏன்டா கார்த் திக், தொண்டையை அப்படி செய்துக்கறே?”

  • செய்யனும்போல இருக்கு தாத்தா, செய்யறேன்.”

துளசி, ஆடாதோடை, சித்தரத்தைக் கஷாயம் என்று மருமகளிடம் பிரஸ்தாபித்ததும்...

அப்பா, நீங்க இப்ப சொன்ன பேர்கள் கூட நாங்கள் கேட்டதில்லே. கங்களுக்கும் தெரியாது. என் அம்மா வீட்டிலேயும் தெரியாது. பாட்டி வைத்யம்னு சொல்லக் கேள்வி. அதோடு சரி. முனுக்குன்னா இங்கே டாக்டரிடம் போயிடுவோம். ஊசி, மாத்திரை, பில் ஏன் கேக்கறிங்க? வரவர சமாளிக்க முடியல்லே, ஆனால் எங்களுக்கு இப்படித் தான் பழக்கம். நீங்க சொல்றதுக்கெல்லாம் எங்களுக்கு நேரம் எங்கே? அவனுக்கு உடம்பு ஒண்னுமில்லே வைட்ட