பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியதர்சனி 3.

தாரைகளின் நறுங்கல் தவிர ஜலம் அமைதி ஓரிரண்டு பாதாமி இலைகள் மிதந்தன.

ஆழத்தில், என் முகத்தருகே சடக் கென இன்னொரு முகம் தெரிந்து-யாரிது?-முகம் நிமிர்வதற்குள் பிம்பம் மறைந்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் முகத்துக்குச் சொந்தக்காரர் காணோம். ஆனால், ஒடின சத்தமும் கேட்கவில்லை. அத்தனை சுருக்க ஒடி இருக்கவும் முடியாது.

ஆனால், கொஞ்ச நாட்களாவே என்மீது புகார்கள் கிளம்பியிருக்கின்றன. வீட்டில் பேசாததெல்லாம் எனக்குக் கேட்கிறதாம் அதனால் சண்டை போடுகிறேனாம். கண்ணுக்கெதிரே குத்துக்கல்லாய் நிற்பது தெரியவில் லையாம். ஏதோ கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதோ பதில் சொல்கிறேனாம். வயசாச்சோன்னோ?-சமயம் வந்தபோதெல்லாம் இடித்துக் காட்டுகிறார்கள்.

பாதாமி மரத்தடியில் பாறாங்கல்லின்மீது உட்காரு கிறேன். தலை லேசாய்க் கிர்ர்ர். உண்மையில் தோன் நிற்றோ? பிம்பம் தோன்றி ஒளிந்துகொண்ட நொடி நேரத்துள் நெஞ்சில் தங்கிவிட்ட அந்த நினைப்பின் ருசி இப்படி உண்டோ? கொடுமை தி சாங் ஆஃப் தி சைரன்ஸ். அம்மா, என்னைக் காப்பாற்று தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொள்கிறேன்

முதலில் அது அவனா? அவளா? அதுவா? என் ஞாபகத்தின் சக்தியை முழு மூச்சில் கூப்பிடுகிறேன். பரட்டை முடியினின்று தப்பின ஓரிரு பிரிகள் என் கன்னத்தில் குறுகுறு?!!? அப்படியானால் அது நிச்சயம் அவள் அவளன்றி வேறாய் வேண்டாம்.

அது அவளானால் அவள் எவள்? அதுதான் கொடுமை, நெற்றி கசகசக்கிறது. திகைப்பூண்டு என்கிறார்களே அது உண்மையா? அடிக்கடி அவள் என்னைக் கேட்கும் கேள்வி.