பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 姆瑟

கணும்; பண்ணையாளுக்குக் கூழ் வார்க்கணும், சாயங்காலம் பரிவட்டத்தைத் தூக்கிக்கொண்டு, பாவு நூல் ஒடும் ஆலைக்குப் போகணும். -

இழைக்கு இழை நிமிட்டி நெய்தாகனும், இழைக்கு இழை.

இதற்குள் இரவு மறுபடியும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும்.

ஆசை வெறியில் ஒருவர் அணைப்பில் ஒருவர் திணறும் மூச்சுத்தான் அவர்கள் பேச்சு.

கிழவி விசுப்பலகையில் படுத்தவண்ணம் முனகுவாள்.

அடுப்பைப் பார்த்து மூட்டு, உள்ளே பூனைக்குட்டி, துரங்கிக்கிட்டிருக்கப் போ வு து என்னிக்கோ, இந்த வீட்டுக்கு வந்த பெண்ணு ஒண்னு பார்க்காமே மூட்டிப் பிட்டு, ஒரு குட்டியைப் பொசுக்கித்தான் இப்போ மூனு: தலைமுறையா வீட்டுக்கு ஒரே புள்ளையா நிக்கிது. எனக்குப் பாடை கட்டி சங்கூதினப்பறந்தான் பேரப்பிள்ளை வீட்டிலே நடமாடுவான் போலத் தோணுது. மருமவள் வீட்டுக்கு வந்து ஆறுமாதமாச்சு. இன்னும் ஒண்னுந் தெரியல்லே...'

கிழவியின் நெஞ்சுக் குறையைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அதைத் தீர்ப்பதும் அவர்கள் வசமில்லை. அதெல்லாம் முருகன் அருள். இப்பொழுதைக்கு ஒருவரில் ஒருவர் முழுகியிருந்தனர். அவ்வளவுதான், நெய்ய நெய்ய இடங் கொடுக்கும் பாவு நூல் போல், ஒருவர் இன்பத்தை ஒருவர் நுகர நுகர, அவர்கள் ஆசை இடங்கொடுத்துக் கொண்டே போயிற்று. உடலில் இளமையிருக்கும் வரை அவை தளும்பிக்கொண்டிருக்குமேயொழிய துடிப்பற்று நின்றுகொண்டிருக்குமா?

நாளடைவில், அவனையுமறியாமல் அவளிடம் அவன் விழைந்துபோவதாகத் தோன்றிற்று, அவன் வைத்திருக்கும் ஆசையின் உணர்வே அவளுக்கு ஒரு தனி சோபையை