பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதை கன்பூசியஸ் தெரிந்து, கசந்தான். நேரே பார்த்தான் ; வெறுத்தான். உட்கார்ந் திருந்த ஆசனத்தை உதைத்தான்; போய் விட்டான். இதற்குப் பிறகு ஐந்து வருஷங்கள் ஊர் சுற்றும் நாடோடி யாக இருந்தான் ! . . . . . -

கடைசியில் அவன் மஞ்சள் நதி ஓரத்தில் இருக்கும் 'வி' தேசத்துக்கு வந்து சேர்ந்தான். அதை ஆளும் அரசி நான்சியா நல்ல அழகி. ஆனாலும், நடத்தையில் அவள் ஒரு மலர். எத்தனை வண்டுகள் வந் தாலும் இடந்தரக் கூடியவள். அவள் கன்பூசியஸின் அழகைப் பார்த்து, ஆசையை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு, அதற்காக அவனை அழைத்து வரச் சொன்னாள் சந்தித்தார்கள். அதுமுதல் அவன் இரவில் மட்டுமல்ல, பகலில் கூட அவள் பக்கத்திலேயே உட்கார ஆரம்பித்து விட்டான்

- ஒரு நாள் அவன் நான்சி ராஜாத்தியோடு வெள்ளைக் குதிரை பூட்டிய வண்டியில் போய்க் கொண்டிருந்தபோது, சிஷ்யர்களில் சிலர், "அப் போது நீலக் குதிரையை மறுத்தவர், இப்போத வெள்ளைக் குதிரையை வரவேற்று விட்டாரோ" என்று பேசிக் கொள் வதைக் கேட்டு, கன்பூசியஸ் வண்டியை நிறுத்தச் சொல்லி ராணியிடத்தில் நான் ராஜாவாக இல்லை. ஞானியாகத் தான் நடந்து கொள்கிறேன். இதை நான் ஏற்படுத்திய மதத்தின் மேல் சத்தியம் வைத்துச் சொல்கிறேன். நம்புங் கள் என்று சொன்னான். -

- வயது முற்றிய காலங்களில் அவன் படுத்த படுக்கையில் இருந்தபடியே உபதேசம் செய்து வந்தான். தன் சாவு இன்னும் கொஞ்ச நேரத் தில் வரப் போகிறது என்ற தெரிந்து கொண்ட ஞானி, 'சீன தேசத்தின் பெரிய மலை இதோ இடியப் போகிறது. விழட்டும், இது இனிமேல் விழ வேண்டியதுதான். என்

18 எப்போதும் இருப்பவர்கள்