பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதம் விசாரணை நடந்தது. பெண்ணைக் கெடுத்ததற்காக, பேராசிரியன் பணம் கேட்டான் ; அவனுக்கு வேண்டியவர் கள் தூண்டிவிட, அதைப் பவுனாகக் கேட்டான்; அதையும் 200 ஆயிரமாகக் கேட்டாள்-மேரி 1 ஆனால், நீதிபதி கன்னியின் கற்பைக் கெடுத்ததற்காக, வில்லியத்துக்கு ஒரே ஒரு காலணா அபராதம் போட்டார்.

விசாரணைக்குப் பிறகு, வில்லி யம், தன் ஆடம்பரத்தை விட்டு விட்டான். அழுக்குத் துணிகளையே உடுத்தி வந்தான். எந்தக் காரியத்திலும் சரியாக ஈடுபடுவதில்லை. நண்பர்களிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டான். தான் செய்துவிட்ட பாபங்களை, அடிக்கடி நினைத்துக் கண்ணீர் விட்டான். நினைவின் தொந் தரவுகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக குடித் துக்கொண்டே இருந்தான்.

- அவனுடைய துன்பம் கலந்த நேரத்தில் ஒரு நாள். அதுவும் வெள்ளிக்கிழமை அந்தி நேரம். அப்போது அடித்துக் கொண்டேயிருந்த ஆலயமணி யின் நாக்கு, திடீரென்று அறுந்து விழுந்தது. -

- வில் லிய த் தி ன் மூச்சும், அவனைவிட்டு விலகிக் கொண்டது.

தமிழ் முழக்கம் அச்சகம், சென்னை ГТА.