பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்கார் ஒயில்டு



கடவுள், அவர் தூதர்கள் ; அரசன், அவன் கீர்த்தி ; பிரபுக்கள், அவர்கள் ஆடம்பரம்-இவற்றைப் பற்றி எல்லாம், ஏடு ஏடாக எழுதி வந்த நேரத்தில், விக்டோரியா ராணி ஆண்ட அந்த நேரத்தில், பத்தினிப் பெண்களைப் பற்றி எழுதாமல், விபசாரிகளைப்பற்றி எழுத ஆரம்பித்தவன், அதையும் கவிதையாக எழுதி முடித்தவன், அந்த முதல் மனிதன்—ஆஸ்கார் ஒயிலடுதான்.


ரோமானியர்களைப் போல, அவர்கள் சிற்பங்களைப்போல, வர்ண சித்திரங்களைப்போல, இவன் அவ்வள அழகானவன். இந்தக் காலத்து நோபில் பரிசுக்குச் சமமான அந்தக் காலத்து நியூடிகேட் பரிசை இவன் எழுதிய கவிதைக்காக கொடுத்தார்கள். இந்தப் பரிசு கிடைக்கதும், கிளியோபாத்ராவின் முத்தம், சீசருக்கும் ஆன்டனிக்கும் கிடைத்ததபோல தனக்கும் கிடைத்துவிட்டதாக சந்தோஷப்பட்டுக் கொண்டான்.


இவன், டாக்டர் வில்லியத்துக்கும், கவி ஜேனுக்கும் இரண்டாவது குழந்கையாகப் பிறந்தவன். பெண் குழந்தையைப்போல் இவனை அடிக்கடி சிங்காரித்து ஜேன் ஆனந்தப்படுவாள் படிக்கும் காலங்களில் இவன் குடிப்பான். சூதாடுவது, விபச்சார வித்தையில் ஈடுபடுவது-இப்படி இருந்து வந்தான். அழகான பெண்களை அடிக்கடி வரவழைத்து விருந்து நடத்துவான். பிறகு விபச்சாரம் நடத்துவான். இவன் அறையில் வெறும் புஸ்தகங்கள் மட்டும் இருப்பதில்லை. நீலவர்ணக் கோட்டுகள், பலவிதமான முகம் பார்க்கும் கண்ணாடிகள், முத்த மிட்ட பெண்கள் உதிர்த்துவிட்டுச் சென்ற லில்லி புஷ்பங்கள், அவர்கள் போட்ட கையெழுத்துக்கள், நிர்வாணமாக

எப்போதும் இருப்பவர்கள்