பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருக்கும் பெண் பொம்மைகள், அந்தப் பொம்மைகளின் காலடியில் இவன் எழுதி வைக்கும் காமக் கவிதைகள்-இவ்வளவும் இருக்கும். ஒரு தடவை, இவன் ஒருத்தியுடன், 'உதட்டில் உதடு'வைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்ணின் தாய் பார்த்து விட்டாள். உடனே, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.


இவன் 1881-ல், ஆஸ்கார்' ஒயில்டின் கவிதைகள்’ என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டான். அந்தப் புஸ்தகத்தின் முன் பக்கத்தில்,


"இந்த நூற்றாண்டில், என்னைப்போன்ற ஒரு மேதையை வைத்துக் கொண்டே,கீட்ஸ், ரோசடி, மில்டன், ஷெல்லி, ஆர்னால்ட்டு, ப்ரவுனிங், ஸ்வின்பர்ன், வேர்ட்ஸ் ஒர்த்-இந்தக் கவிஞர்களை இனி மேல் யாராலும் ஜெயிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். நான் சொல்லுகிறேன், இவர்கள் எல்லாம் வாக்கியங்களை வளர்த்துக் கொண்டே போகும் ஆடம்பர வார்த்தைகளை கவிதை என்று நிச்சயிப்பவர்கள்" என்று தன்னைப் பற்றி ஆரம்பிக்கிறான்.

இந்தப் புஸ்தகம், ஒரு நூல் நிலையத்துக்கு வந்தது. இதைப் படித்துப் பார்த்த ஒரு பேராசிரியர், பக்கத்திலிருந்த நண்பரிடம் "கெளரவத்தோடு ஒரு அவமானத்தை சேர்த்து வைக்க விரும்பவில்லை. அதனால் இந்த புஸ்தகத்தை மறுக்கிறேன். ஆஸ்கார் பாபத்தை செய்பவன், அவன் கவிதைகளும் பாபத்தைச் செய்யச் சொல்லுகின்றன. அதுமட்டுமல்ல, இவன் புஸ்தகத்தில் 63 கவிஞர்கள் புகுந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார். கவிதைத் தொகுப்பு திரும்பிப் போய் விட்டது.

சில வருஷங்களுக்குப் பிறகு டக்ளஸ் என்ற ஒரு பணக்காரப் பையனுடைய ஸ்நேகம், ஒயில்டுக்குக் கிடைத்தது. டக்ளஸ், கவிதை மோஹம் பிடித்தவன். நல்ல அழகன். இவன் அழகு ஆஸ்காரைக் கவர்ந்தது. ஆஸ்கார் அழகும் இவனைக் கவர்ந்தது.

சுரதா

3