பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிறகு, ஆஸ்கார் புருஷனாகவும். டக்ளஸ் மனைவியாகவும் நடந்து கொண்டார்கள். அன்று முதல், ஆஸ்கார் இவனை டக்ளஸ் என்று கூப்பிடுவதில்லை. ஒரு பெண்ணின் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வந்தான். சில சமயம், இவனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, "கண்ணே! உன்னுடைய சிவந்த ரோஜா உதடுகள், பாடுவதற்காகப் பிறக்கவில்லை. ஒரு பெண் முத்தம் ஒத்துவதற்காக பிறக்கவில்லை. இவை, எனக்காகவே பிறந்திருக்கின்றன, என் சாவு நேரும் வரையிலும், உன் உதடுகள். எனக்குச் சொந்தம்" என்று குடி மயக்கத்தில் சொல்வான். பிக்காடி ஒட்டலில், ஒரு சமயம் இப்படி நடந்துகொண்ட போது, நல்ல உதை வாங்கினார்கள்.

          ஆஸ்காரின் இந்த நடத்தை, டக்ளஸின் தகப்பன், குவின்ஸ்பெரிக்குத் தெரிந்து விட்டது. மகனைக் கண்டித்தான். ஒயில்டுக்கும் எச்சரிக்கை எழுதினான். கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் சரீர விஷயம் நீடித்துக் கொண்டே இருந்தது.
         பிறகு, குவின்ஸ்பெரி, இந்த அழுக்கு நடத்தையை, ஊரெங்கும் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான். ஒயில்டைப் பற்றி அவமானப் பேச்சுக்கள் உலவிக் கொண்டே இருந்தன. 
        இந்தப் பேச்சுக்களைத் தாங்க முடியாத ஒயில்டு, குவின்ஸ்பெரியின்மேல் 'கஷ்ட வழக்கு'த் தொடுத்தான். ஆனால், ஆரம்பத்துக்குப் பிறகு அந்த வழக்கு, இவனுக்கே விரோதமாகி விட்டது.
       உலகத்தில்,பருவமாகாத பெண்ணை, ஒருவனுக்கு மனைவியாக இருப்பவளை, தன் மீது ஆசைப்படாதவளை, தனக்கு முறையில்லாத ஒருத்தியை-கெடுத்தான்;காமம் புரிந்தான், என்பதற்காக அல்ல இந்த வழக்கு; பல வாலிபர்களை மனைவியைப்போல் உபயோகித்துக் கொண்டான், அந்தப் பாப நடத்தை செய்தான், என்பதற்காக, லஞ்சக்காார்கள், இவன்


4 எப்போதும் இருப்பவர்கள்