பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிடிப்பவர் குப்பத்திலிருந்து இந்தப் புரட்சி ஆரம்பித்தது. முக்கியமானவர்கள் எல்லாம் தூக்கில் தொங்க ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட புஷ்கின் ராஜ ஆட்சியை அழித்து விடுவதற்கு ஒரு ராட்சஸ புரட்சியை நடத்தியே தீருவது என்று நினைக்க ஆரம்பித்தான்.

        தண்டனை தீர்ந்தது. மறுபடியும் புஷ்கின் மாஸ்கோவுக்கு வந்தான். பழைய சிநேகிதர்களை சந்தித்தான். புரட்சித் திட்டங்களை விவேகத்தோடு சொன்னான். புரட்சிக்காரர்கள் வேகத்தோடு செய்தார்கள்.இதைக் கண்டு ஜார் மகுடத்தோடு நடுங்கினான்.
    'ஆயுதங்கள், முட்டாளை ஜெயித்து விடலாம் ; ஆனால் அறிவாளியைத் தந்திரம் தான் வசப்படுத்த முடியும்'என்பதை ஜார் மன்னன் உணர்ந்து, உடனே புஷ்கினைக் கூப்பிட்டு அவனுக்கு அரசாங்கத்தில் ஒரு பதவியைக் கொடுத்தான்.
       இவன் தனது முப்பத்திாண்டாவது வயதில் 'கோன்சரோவா' என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இவள் உலக அழகிகளுள் ஒருத்தி, அதனால் எல்லோருக்கும் அவள்மேல் இச்சை இருந்தது. ஜார் அரசன் சாகஸமாக புஷ்கின் மனைவியை தன் காமப் பத்தினியாக ஆக்கிக் கொண்டான்! அரசனுக்கும், இவளுக்கும் இங்க 'இரவு நேர நடத்தை' நிற்காமல் நீடித்துக் கொண்டே இருந்தது. இவள் செய்து வரும் இந்த ஆரம்ப அயோக்கியத்தனம் புஷ்கினுக்குத் தெரியாது. 
    ஒழுக்கத்திலிருந்து ஒரு தடவை தடுமாறிய இவள், இரண்டாவதாக ஆந்திஸ் என்ற அழகனுக்கும் தன் இரட்டை உதடுகளைத் தந்து வந்தாள்!

சுரதா 7