பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 எமிலி Gಣ್ಣTNT (Dreyfus) இராணுவத் தளபதியாகிய இவன் தவிர வேறு யார் இவ்வளவு தைரியமாக இந்த அடாக செயலைச் செய்திருக்கமுடியும். இவ்வளவு கொடுமை கள் செய்த இவனே நடுத்தெருவில் நிறுத்திக்கொளுத்தி யிருக்கவேண்டும். ஏதோ போகட்டும் என்ற காருண் ணிய உள்ளத்தோடு ஆயுள் தண்டனே அளித்திருக் கிறது நீதி மன்றம். எதிர்த்துப்பேச வக்கு, வகையில்லாமல் ' நான் குற்றமற்றவன்' என்று மட்டிலும் சொல்லுகிருன் அந்த யூதக் குற்றவாளி டிரைபஸ். அப்படிச் சொல்லித் தப் பித்துக் கொள்ளாமல் என்ன செய்வான். தான் தப் பித்துக் கொள்ளத் தந்திரமான ஆதாரங்களைத் தேடி வைக்க மறந்துவிட்டான் போலும். இராணுவச் சேவை செய்தவன் அல்லவா, எதிலும் அவசரமுடிவு அதையே தான் இதிலும் செய்து அகப்பட்டுக் கொண்டான். ' ' அவனுக்காக வாரிசு பேசுகிருன், இந்தக்கிறுக்கன் ஜோலா. இவன் வாயில் கொறடாவைவிட்டுப் பிளந் திருக்கவேண்டும். இழுங்கள். விடாதீர்கள். தலே நகரில் கொண்டுபோய்க் கொளுத்தவேண்டும், ' என்று நிரபராதி டிரைபஸ், நீதிக்காக போராடிய ஜோலா ஆகிய இருவர் உருவங்களேயும் வைக்கோலால் கொடும் பாவிகட்டி தெருத் தெருவாக இழுத்துக்கொண்டு போகின்றனர் ஏதுமறியாத மக்கள். எக்காளமிடுகின்ற னர், தெரிந்தும் வேண்டுமென்றே செய்த வீணர்கள். உண்மை தெரியாமல் விழிக்கின்றனர் விவேகிகள். ஒன் றும் பேசாமல் இருக்கின்றனர் உண்மை விரும்பிகள். நெளிந்த மனதோடு திரும்புகின்றனர் நீதியில் நாட்டங் கொண்டோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/12&oldid=759809" இலிருந்து மீள்விக்கப்பட்டது