பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 எமிலி ஜோலா இராணுவத் தலைமை நிலயம்-அதோடு சேர்ந்து கூத் ஆாடுகின்றனர் ஒன்று மறியாத மக்கள். "யூதன் ஒழிந்தான் எக்காளமிடுகின்றனர் பிரபுக் கள். பொல்லாதவன் புலி வேடம் போட்டு ஆடும் போது, நல்லவன் ஒதுங்கிப் போவதைப் போல், அந்தி ஆரவாரம் செய்கிறபோது, நீதி தலை குனிந்து கொண்டு போய் விடுகிறது. நீதி குடியிருப்பது, நல்லவர்கள் மன. தில், அந்த ஒரு சில நல்லவர்களும் காலக் கேட்டால் பொல்லாதவர்களாகின்ற போது, நீதி குடியிருக்க இட மில்லாமல் வெளியேறி விடுகிறது. அதை யார் தேடிப் பிடிப்பது, யாருடைய கண்களுக்குத் தெரியும். யாரு டைய மனதில் குடியிருக்கும். அவன் ஒரு பராரியா யிருப்பான். அவன் தைரியமாக முன் வந்து, சொல்ல முடியுமா, இதோ என் அகத்தில் நீதி குடி புகுந்திருக் கின்றதென்று. அப்படியே அவன் துணிந்து, சொல்ல முன்வந்தாலும், அதை ஏற்க, ஏற்று ஆவன செய்ய ய்ார் முன் வருவார்கள் ? அந்தப் பராரி நிலையிலிருந்தவன்தான் டிரைபசுக்கு உயிர்ப்பிச்சை தந்து, சிதைய இருந்த நீதிக்கு அப்ய் மளித்து, கெட இருந்த பிரான்சின் கெளரவத்தைக் காப் பாற்றி அகில உலக இலக்கிய மன்றத்தின் அழியாத சின்னமாக விள்ங்குகிற, பேனுவால் நானு எழுதிய எமிலி ஜோலா என்ற பேரறிஞன். எழுத்துக்கனலால், ஈனர்க்ளின் இறுமாப்பைப் பொசுக்கிய எரிமலை. - எங். கேயோ அடையாளந் தெரியாதபடி வெட்டித்தள்ளப் பட்டிருந்தந்திய மன்றத்துக்கழைத்த மாவீரன். ஒரு நிரபராதிக்கு வாழ்வளித்தான் என்று வையகம் அவனேக் கொண்டாடவில்லை. நீதிக்கு நிகரற்ற வாழ்வளித்தான் என்று உலகம் உவகை பூக்கிறது. பிரான்சு நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/14&oldid=759811" இலிருந்து மீள்விக்கப்பட்டது