பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 - எமிலி ஜோலா தயங்காமல் வெளியே வா! உன் முக மூடியைக் கிழித்து உன் உண்மை உருவத்தை உலகுக்குக் காட்டுகின்றேன். வா வெளியே! ' என்று சங்கநாதம் செய்தான் தைரியத் தின் தந்தை ஜோலா. இவன் யார் ? இந்தப் புரட்சிக்காரன் யார் ? பாட்டி கிரேக்க நாட்டாள். தாய் பிரான்சு தேசத்தாள். தந்தை இதாலிய நாட்டான். கிரேக்கத்தின் தத்துவம், பிரான் சின் அழகு, கலே, இதாலியின் ரோம் நாகரிகம் ஆகிய வைகள் ஒன்று சேர்ந்த உருவந்தான் ஜோலா. ஜோலா என்ருல் நிலத்தின் ஆடை என்று பொருள். இளமை யில் திக்குவாயன். சரியாகப் பேசக்கூடத் தெரியாத வன். யாராவது 'உன்னுடைய பெயர் என்ன ? என்று கேட்டால், ஜோலா என்பதற்குப் பதில், தோலா என் பான். இந்தப் பிள்ளே யைத்தான் தாயோடுவிட்டுவிட்டு இறந்துவிட்டான், சிவில் இன்ஜினராக வேலை பார்த்து வந்த இவன் தந்தை பி ரா ன் சி ஸ் கோ ேஜ ல ா. (Francisco Zola). * . தந்தையின் முடிவுக்குப்பின் தாயாரால் சிறிது நாட் கள் வளர்க்கப்பட்டு எய்க்ஸ் (Aix} என்ற கல்லூரியில் படிப்பதற்காகக் சேர்க்கப்பட்டான். அங்கே இவன் படித்த பாடங்களேவிட, படித்த நாட்களேவிட மாண வர்களிடம் சண்டை போட்ட நாட்கள்தாம் அதிகமா யிருக்கும். ஒரு பெரிய கூட்டத்தையே எதிர்த்துப் போராடுவான். இப்படி ஏற்பட்ட பல தடவைகளிலே ஒரு தடவை மாணவர்களால் நையப்புடைக்கப்பட்டு மூர்ச்சையாய்க் கீழே விழுந்துவிட்டான். இவன் இறந்து விட்டிருப்பான் என்று பயந்து மாணவர்கள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/16&oldid=759813" இலிருந்து மீள்விக்கப்பட்டது