பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O எமிலி ஜேர்லா காணலாம். வேக்ஸ்க்கு ஆள் தேவைப்படுகின்றவர்கள் கூட இந்த மாதிரியான பலகைகளைத் தொங்கவிடி மாட்டார்கள். ஏனென்ருல் ஒரு ஆள் தேவைக்காக இந்தப் பலகையைத் தொங்க விட்டால் நாள் ஒன்றுக்கு ஒன்பாதாயிரம் ஆட்கள் உள்ளே நுழைந்து உயிரை வாங்குவார்கள். . . . . - ஆளுக்கு வேலை தேடுவதுதான் கடினமே தவிர, வேலைக்கு ஆள் தேடுவதா கடினம்? அப்படியே இரண் டொருவர் வேண்டுமென்ருல், ஏற்கெனவே வேலைசெய்து கொண்டிருப்பவர்களுடைய சொந்தக்காரர்கள் யாரா வது இருக்கமாட்டார்களா, அவர்களே இழுத்து விட்டு விட்டால் போகிறது. இதற்காக அந்தப் பலகையை மாட்டுவானேன்? வெறும் சிபார்சுக் கடிதங்களாக வந்து குவிவானேன். நல்லவர்கள் நிஷ்டுரத்தைத் தேடிக் கொள்வானேன் என்று இருந்துவிடுகின்ருர்கள். இந்த் நிலையில் ஜோலாவுக்கு வேலை கிடைப்பதெங்கே? அவன் வறுமையை ஒட்டி நிம்மதியான வாழ்வை மேற்கொள்வ தெங்கே ? நாளெல்லாம் சுற்றுகிருன். எங்கே போகி ருேம் என்ற குறிக்கோளில்லாமல் சுற்றுகிருன். எங்கும் வேலே கிடைத்தபாடில்லே. தந்தையின் நண்பன் செய்வதின்னதென்றறியாது படுபாதாளத்தில் விழ, இருந்த இவனே. இவனுடைய தந்தையின் நண்பன்: லாபாட் என்பவன் நெப்போலியன் டாக்கில் ஒரு குமாஸ்தா வேலையை வாங்கித் தந்தான். அதனல் கிடைத்த வருவாய் இவன் வயிற்றை நிரப்பி உடலை மூடிக்கொள்ள மட்டிலுமே போதியதாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/20&oldid=759817" இலிருந்து மீள்விக்கப்பட்டது