பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 23 யார் படிப்பார்கள்? இவர்கள் வறுமையால் வடித்துக் தந்த காவியத்தையும். ஒவியத்தையும் பொதுமக்கள் என்ற ஜோதியில் கலக்கவிடவில்லை. இந்த நிலையில் ஜோலா ஒரு நாள் மனமுடைந்து சொல்கின்றன். ' என்ருவது ஓர் நாள் நான் ஓர் சிறந்த இலக்கியத்தை எழுதப் போகின்றேன்,' என்று, எதிர் காலத்தில் தளராத நம்பிக்கையோடு இப்படிச் சொல்லு கிற இவனப் பார்த்து. 'உம், உம், அதுதான் பார்க் கின்ருேமே, தினம் பட்டி னி, மனக் கோட்டைகள், உட்கார்ந்துகொண்டிருக்கும் உனது காவியங்கள், உறங் கிக்கொண்டிருக்கும் எனது ஒவியங்கள், அவைகளைப் பார்த்துத் திட்டிக்கொண்டிருக்கும் நம்முடைய பசித்த வயிறுகள் எல்லாவற்றையுந்தான் பார்த்துக்கொண்டிருக் கின்ருேமே, நாம் மாத்திரமா பார்த்துக்கொண்டிருக் கின்ருேம். நம்மிடம் வாடகை கேட்டுக் கேட்டுச் சபித் துப்ப்ோன வீட்டுக்காரன். நாளப் பணங்கொடுக்கா விட்டால் பட்டினியாகப் போட்டு சாகடிப்பேன் என்று. பயமுறுத்தும் ரொட்டிக் கடைக்காரன். பாவிகளா! கடன்காரத் துரோகிகளா ! என்று திட்டும் பால்காரன், : இப்ப்டிய்ம் உடலை வளர்க்கின்ருர்களே, என்று கேலி செய்யும் நகர மக்கள் எல்லாருந்தான் பார்த்துக்கொண் டிருக்கின்ருர்களே. சும்மா படு. அதே மூலயில் இருக்கிறதே கூஜா. அதில் நிறையத் தண்ணிர் கொண்டு வந்து வைத்திருக்கின்றேன். வயிறு நிறையக் குடித்து விக்டுப் படு. துக்கம் எங்கே வரப்போகிறது? துரங்கா டில்ஆவேறு என்னதான் செய்வது? எல்லாருந்தான். துரங்குகின்ருர்களே. இப்போது நாம் மாத்திரம் என்ன் செய்வது? அவர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதே நம்முடைய வியாபாரம் நடப்பதில்லை. துங்கும்போதா நடக்கப்போகின்றது. பேசாமல் படு. இதுவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/23&oldid=759820" இலிருந்து மீள்விக்கப்பட்டது