பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எமிலி ஜோலா எழுதிய காவியமும் ஓவியமும் செல்வாகட்டும். பின்னல் எழுதலாம். என்னமோ பாழாய்ப்போன பாரீஸ் பட்ட ணத்தில் வர வர கல ரசிப்பே ஒழிஞ்சிப்போச்சு' இப் படி முனு முனுக்கிருன் செஸ்ானே. சில நேரம் களைப்பால் தூங்கி விடுவான் செலானே. பசி பொறுக்கமாட்டாமல் பகல் வேளையில் இப்படி அப்படி உலவிக்கொண்டிருப்பான் ஜோலா. சிட்டுக்குருவி கூட்டம் கூட்டமாக வந்து கூரைமேல் உட்காரும். குருவிகளே அறையின் உள்ளிருந்தபடியே பிடித்துக் கொள்ளலாம், அவ்வளவு பெரிய கை நுழைகின்ற அள வுக்குச் சந்துகள் இருக்கும் கூரையிலே-மழைக்காலங் களில் இவர்கள் அறையிலிருந்தாலும் வெளியிலே இருந்தாலும் ஒன்றுதான். சில நேரங்களில் அடை மழை பிடித்து அறையெல்லாம் வெள்ளக்காடாயிருக் கும். மழையைத் தடுக்கச் சந்துகளே அடைக்க தன் பழைய கோட்டுக் கந்தல்களால் அந்த சத்துகளை அடைப்பான் ஜோலா. சமாளிக்கமுடியாத பசி எடுக்கும்போது கூரையில் வந்து கூட்டமாக உட்காரும் குருவிகளப் பிடித்து கம்பியில் குத்தி விளக்கில் வாட்டி பக்குவப்படுத்தித் துங்கும் தன் ஓவியப் புலவனே எழுப்பி உடனிருந்து உண்பான். பிற்காலத்தில் பிரான்சுநாடே தல வணங் கத்தக்கத் தலைவனுடைய கெதி சிட்டுக்குருவி உணவு. இவர்கள் பசிக்காகக் குருவிகளைச் சாப்பிடுகிருர்கள். எவ்வளவோ சீமான்கள் சுகமனுபவிக்கச் சித்தாந்த சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுகிருர்கள். என்ன உல கம் இது என்று இன்னமும் பல ஏழைகள் எங்கத்தான் செய்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/24&oldid=759821" இலிருந்து மீள்விக்கப்பட்டது