பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 25 குருவியைக் கொல்வது பாவந்தான் ஏன்று இவர் களுக்கும் தெரியும். ஆனல் கும்பி கேட்கவில்லையே: சண்மார்க்கம் தெரிந்த எவ்வளவோ பேர்கள் துன்மார்க் கர்களாக மாறுவதற்கு என்ன காரணம் என்று உலகத். தையே அதட்டிக் கேட்ட எமிலிஜோலாவுக்கு இதோப தேசம் தெரியாமலா இருக்கும். எந்த சூழ்நில நல்ல வனத் திருடனுக்குகிறதோ, எ ந் த சூழ்நில நல்ல மாதரை விலைமாதர்களாக்கியதோ, எந்த சூழ்நிலை யோக் கியர்களை அயோக்கியர்களாக்கியதோ அதே சூழ்நிலை தான் நமது வருங்கால இலக்கியத் தந்தையை குருவி களைக் கொன்று தின்னச் செய்தது. ஏழ்மையை எடுத்' துக்காட்ட இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக: அமைகிறது பிற்காலத்தில். இரண்டாவது தொழில் - இப்படிப் பல நாட்கள் வாடி வதங்கியபின் மீண்டும் தன் தந்தையின் நண்பர் ஒருவரால் ஒரு நூல் வெளி யிட்டுக் கம்பெனியில் புத்தகங்களைக் கட்டுக் கட்டும் வேலை கிடைக்கிறது. அந்தத் தொழிலில்தான் இவன் உலகத்தின் பல பாகங்களைக் காணமுடிந்தது. ஏனெனில் தான் கட்டுக் கட்டும் நூல்கள் பலவற்றைப் படிப்பான். படித்ததோடு நில்லாமல் சிந்தித்து அந்த நூல்களைப் பற்றிய கருத்துரைகளே எழுதி அனுப்புவான். எழுத்தாளன் - தான்'ஒரு தலே சிறந்த எழுத்தாளன் ஆக வேண்டு மென்பதிலே அவனுக்கிருந்த ஆர்வம் சொல்ல முடியா தது. ஏனெனில் உண்மையும் வண்மையும் உயிர்த் துடிப்பும் உள்ள எழுத்துகள் உலகத்தை என்னென்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/25&oldid=759822" இலிருந்து மீள்விக்கப்பட்டது