பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 27 நெப்போலியனுடைய ஆட்சி ஏற்படவேண்டிய நிலக்கு வந்துவிட்டது. அந்தப் புரட்சியின் வேகம் பைத்தியக் காரனுக்கு மயக்க மருந்தை கொடுத்ததைப் போல், புரட்சியை எதிர்த்தவர்களும் கொல்லப்பட்டார்கள், புரட்சி செய்தவர்களும் கொல்லப்பட்டார்கள். எந்த மக்களுக்காகப் புரட்சித் தலைவர்கள் தோன்றவேண்டி யது அவசியமாயிற்ருே. அதே மக்களால் அதே புரட் சித் தலைவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களானுர் கள். அந்த அளவுக்குப் பிணப் பசியும் ரத்தத் தாகமும் தோன்றிவிட்டது அவர்கள் எழுத்துக்களால், மேலும் அவர்களுடைய எழுத்துக்கள் வெறும் அரசியல் மாத் திரம் குறி பார்த்துச் சமூகத்தை மே ல் வாரியாகத் தொட்டும் தொடாமலும் விட்டுவிட்டது. அவர்கள்: சமூகத்தைச் சுட்டிக் காட்டிய இடங்களிலெல்லாம், சமூகப் பலகைக்கு அரசியல் சட்டம் போட்டதைப் போல் முடிந்துவிட்டது. ஆனல் ஜோலாவின் எழுத்துக்கள் ஒரேயடியாக சமூ கத்தையும் அரசியலயும் தட்டி எழுப்ப, சதி செய்த சண்டாளர்களேச் சந்திக்கிறது. ஏனென்ருல் அன்றைய 'பிரான்சு நாட்டின் நில சமுகத்தையும் அரசியலயும் வெவ்வேருகப் பிரிக்க முடியாமல் ஒன்ருேடொன்று பின் னிக்கொண்டிருந்தன. - - இரண்டும் ஒன்றறக் கலந்ததின் விளவாகச் சமூக இழிவுகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சாரார் தங்கள் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் இந்த ரகசியத்தையும் சூதையும் அறியாத பெரும் பாலான பாமரமக்களே அடிமைகளைப்போல் கொடுமைப் படுத்தவுமான நிலையையுண்டாக்கிவிட்டது. இதோடு நின்றுவிடவில்லே. இந்தக் கொடுமை பிரான்சு நாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/27&oldid=759824" இலிருந்து மீள்விக்கப்பட்டது