பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எமிலி ஜோலா எந்த அளவுக்குக் கொண்டுபோய்விட்டுவிட்டதென்ருல், பழிசுமத்தல், வஞ்சந்திர்த்தல், காரணமில்லாமல் ஒரு வனச் சிறையிலடைத்தல், நிரபராதிகளைக் கொன்று. குவித்தல், ஆகிய அராஜரீகமான பயங்கரச் செயல்கள், அன்ருட நிகழ்ச்சிகளாய் விட்டன. அது மட்டிலுமல்ல, இந்தக் கொடுமைகளுக்கு அவர்கள் காட்டிய மரியாதை ராணிக்குக் காட்டும் மரியாதையைவிடப் பன்மடங்கதிக மாக இருந்தது. சீ ல த் தை மதிக்கிருயா ? செங் கோலுக்குப் பணிகிருயா? சித்ரவதை செய்ய விரும்பு கிருயா ! எது உனக்குப் பிடித்தம் என்று அன்றிருந்த பிரான்சு நாட்டான் எவனேயாவது கேட்டால், சிலம் என்ற சொல்லே எங்கேயோ கேட்டதாக நினைவு, செங், கோல் என்ன பிரமாதம், சித்ரவதை ஒன்றுதான் என்; விரத்தைக் காட்டும் என்று சிரிப்பான். ஒழுக்கம் கழு. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காலம். சிலமுள்ள, வன் சோம்பேறியாகவும் சிறுமதியும் குறைமதியும் படைத்தவன் சீலமுள்ளவனுகவும் கருதப்பட்டான். இப்படியே பல ஆண்டுகள் ஒரு நாடு போய்க்கொண்டி ருந்தால் அதன் கதி என்ன ஆகும். சமுதாயமும் நாக ரிகமும், ஒழுக்கமும், பண்பும், உயர்ந்த நோக்கங்களும், வெப்பத்தில் வைத்தப் பணிக்கட்டி போல் உருகி, நாடு வெறும் காடாய், அதுவும் நாளடைவில் கல்லும் முள்' ளும் நிறைந்த கட்டாந்தரையாய்விட்டிருக்கும். அந்தப் பயங்கர நிலையிலிருந்து பிரான்சு நாட்டைத் தன் எழுத்துவன்மையால் காப்பாற்றி அந்தப் பொலிவிழந்த பிரான்சு நாட்டுக்குப் புத்துயிர் அளித்தவன்தான் உல் கத்தின் தலைசிறந்த மனிதாபிமானியும் நேர்மையின் நண்பனுமான ஜோலா, - சுற்றி வளைத்துச் சூசகமாகச் சொல்லித் தவறுகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சுட்டிக்காட்டி எழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/28&oldid=759825" இலிருந்து மீள்விக்கப்பட்டது