பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 29. துக்களே எல்லாம் ஈரமாக்கிப் புரிந்தும் புரியாமலும் அடுக்கி, தெரிந்தால் தெரிந்துகொள்ளட்டும் இல்ா. விட்டால் போகட்டும் என்று பராமுகமாக இருந்து விடுபவனல்ல. எந்தச் சக்தின்ய எதிர்த்துப் போராடு கிருேம் நாம், அதன் விளவு என்ன ஆகும் என்பதை யெல்லாம் சிந்தித்து அதல்ை வரும் அபாயத்தை எண்ணி பயந்து, பயத்தின் நடுக்கத்தால் பேணுவைக் தள்ளாடவிட்டுத் தா னு ம் தளர்ந்துவிடுபவனல்ல ஜோலா. - பீரங்கிக் குண்டுகளும், துப்பாக்கி வேட்டுகளும் வைத்த குறிதவறினுலும் தவறிவிடும். ஆனால் ஜோலா வின் எழுத்துக்களுக்குக் குறி தவறியதே இல்லை. குண்டு கள் குறிவைத்த்தை மாத்திரம் அழித்துவிடும், பீரங்கி கள் வெடித்த கட்டிடம் மாத்திரம் நாசமாகும், வாள் பாய்ந்த மனிதன் உயிரோடு.சரி. தீர்ந்தது வேக்ல. ஆல்ை ஜோலாவின் எழுத்துக் கனல், நாகரிகமிக்க பாரீஸ் பட் டணத்தை மாத்திரமல்ல, அந்த அழகு நகரின் தாயக மான பிரான்சு நாட்டை மாத்திரமல்ல, அதைத் தாங்கி நின்ற ஐரோப்பா கண்டத்தை மாத்திரமல்ல, குற்றமற்ற" டிரைபஸ் என்ற இராணுவ வீரன் அடைபட்டிருந்த டெவில்ஸ் இன்ை மிதக்கவைத்திருந்த அலைகடல் மாத் திரமல்ல, அந்த ஓயாத அலேயாண்ட கடலை அணியார மாகக் கொண்ட அகில உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. துங்கித் துங்கி விழுந்துகொண்டிருந்த பிரான்சு அலறி எழுந்தது. நீண்ட் கொட்டாவிவிட்டு தன் கை கால்களைத் திமிரிக்கொண்டு பார்க்கும்போது தன் எதிரில் எமிலி,ஜோலாவின் எழுத்துக்கள் சிங்கம்போல் கர்ஜிக் கின்ற்ன்: இதுவரை யாருமே அந்த நாட்டை ஓங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/29&oldid=759826" இலிருந்து மீள்விக்கப்பட்டது