பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எமிலி ஜோலா - பாரி தன் நாட்டின் துறைமுகத்தையடைந்தவுடன்: பிரான்சுக்கு வரவிருக்கும் வேருேர் வியாபாரியோடு: தொடர்புகொண்டு மீண்டும் தன்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவாள். இப்படி இந்த விபசார வியாபாரம்: செல்லாத நாடுகளே ஐரோப்பாவில் இல்லை என்று: சொல்லுமளவுக்குப் பிரயாணிகளைக் கொத்தித் இன்னும்: கழுகுகளாய்ப் பறந்துகொண்டிருந்தார்க்ள் பார்ஸ்: மங்கைகள். - காமமென்ற குளத்தில் நீராடாத பாரீஸ் சீமான், பரத்தையரின் பாதத்தில் விழாத வெளிநாட்டுச் செல்வர் கள், மொத்தத்தில் பாபிகளெனக் கருதப்பட்டார்கள். இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாற்றியமைக்கப் பட்டுவிட்டது. தங்கள் ஜிவியத்தின் இலட்சியமே. காமக்கலேயின் உச்சியைக் கண்டுபிடித்து விடுவதுதான் என்று ஆண்களும் பெண்களும் ஆனந்தக் கூத்தாடினர் d5 6TI. - * - பெயருக்கு முன்பு ஏதாவதொரு அடைமொழியைப், போட்டுக்கொள்வதைப்போல வாழ்நாளுக்குள் இரண்; டொரு வனிதையர்களின் மையலில் வழுக்கி விழுந்தி, ருக்க வேண்டும். வாத நோய், ரனநோய், குறையாத குன்ம நோய், தீராத காச நோய், கிண்டத்தகாத குஷ்ட நோய், திணறித் திணறிவரும் இருமல், இளப்பு, பெரு மூச்சு பிளவு, ராஜப்பிளவு, புற்றுநோய் பொல்லாத, பிடிப்பு ந்ோய், ஏதாவதொரு முத்திரையை அணிந்தி, ருக்க வேண்டும். " இறந்துவிட்டான், மகாவீரன், ஏதோ இருமல், இகளப்பு நோய்களாம், என்ருலும் இருபது மங்கை களுக்கு மேல் ஆண்டு அனுபவித்தான் ; கொஞ்சமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/36&oldid=759834" இலிருந்து மீள்விக்கப்பட்டது