பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 37 சகாக்காக்வன் " என்றெல்லாம் அவனுடைய கல்ல றைக்கு முன்பு பேசப்படவேண்டும். இப்படிப் பெருகிப் போன இந்த விபசாரத்தின் வியாபாரிகள் ஆண்கள்ா, புெண்களா என்று தெரிந்துகொள்ள விரும்பினுல் அது வீண் விவாதத்துக்கொப்பாகும். பெண்கள் முந்தியிருந் தான் ஆண்கள் தடுத்திருக்கலாம். ஆண் க ேள தொடங்கியிருந்தால் பெண்கள்கூடிக் கண்டித்திருக்க லாம். அல்லது இருசாராரையுமே சர்க்கார் தடுத்தி ருக்கலாம். ஆணுல் யாரும் இதைத் தடுக்க முன்வர வில்லை. ஏனெனில் இந்தக் கேவலமான விபசாரத்திற்கு அவ்வளவு உன்னதமான இடமளிக்கப்பட்டிருந்தது அவரவர்கள் உள்ளங்களில். ஆகவே அதையாராலும் அகற்ற முடியவில்லை. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா ? அந்த முடிவை அளித்தான் ஜோலா. நானு ஜோலாவும், அவனது நண்பன் செலானேயும் ஒரு நாள் மிக ஏழைகள் சாப்பிடும் ஹோட்டலில் சாப்பிட் டுக் கொண்டிருக்கின்றனர். வெளியே, ஒடு ! நிற்காதே, எருமை மாடே ஏதுங் கெட்ட கழுதையே! சதையை வளர்க்கச் சதையை விற் கும் சண்டாளியே எத்தனே முறை என்னிடம் உதை :பட்டிருக்கிருய்? ஓடு, பிடி ஓட்டம், பிடி பிடி, விடாதே, அந்தக் கிழவியை விடாதே, அந்தக் கிழவி தான் இபல மைனர்களுக்கு இந்த விபசாரிகளைப் பேரம் பேசு

கிருள் என்ற குரலும், அதை ஆமோதிப்பதைப்போல் பளிர் பளிர் என்ற சவுக்கடி சப்தமும் கேட்கிறது. அந்தப்போலீஸ்காரர்கள் இப்படிப்பேசியதும், எசியதும், அடித்ததும், மாடுகளையோ, குதிரைகளேயோ, கழுதை

§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/37&oldid=759835" இலிருந்து மீள்விக்கப்பட்டது