பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எமிலி ஜோலா கள்யோ, அல்ல. வாழத் தெரியாத, அல்ல அல்ல, வாழமுடியாமல் வழி தவறிப்போன வனிதையர்களே. x பெண்களின் பயங்கர ஒலி நாலாப் பக்கங்களிலிருந் துங்கேட்டது ஜோலா கரண்டிகளைக்கீழே வைத்து விட்டு ஜன்னலோரமாக வந்து பார்த்தபொழுது போலீஸ்காரர் கள் மூர்க்கத்தனமாகப் பெண்களே விரட்டுகிருக்கள். அவர்களுடைய சவுக்கடியிலிருந்து தப்பித்துக் கொள் ாேப் பெண்கள் இங்குபங்குமாக ஓடுகின்ருர்கள். விட சாரிகளே விரட்டுகிருர்கள். விபசாரத்தையல்ல. விப சார விடுதிகள் எல்லாவற்றிலும் புகுந்து போலீஸ் தடி படி தர்பார் நடத்துகிறது. அந்த வீடுகளிலிருந்த ஆண்களும் அவமானம் சகிக்க முடியாமல் சமையலறை வழியாக ஒடித் தோட்டச் சுவர்களேத் தாண்டி ஒடித் தப்பித்துக் கொள்ளுகின்ருர்கள், மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, ஒரு மங்கை ஜோலா சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு துாணின் பின்னல் ஒளிந்து கொள்கிருள். அங்கே பும் அவளைவிடாமல் போலீஸ்காரன் பின்னுல் விரட்டிக் கொண்டுவருகிருன். அங்கிருந்தும் அவள் தப்பிச் செல்லமார்க்கமில்லை. நடுங்குகிருள். கண்டான் ஜோலா. காரிகையை அருகில் அழைத்தான். பின்தொடர்ந்து வந்த போலீஸ்காரனத் தடுத்து நிறுத்தி, இவள் எனக் குரியவள் ' என்று .ெ சா ல் லி ப் போலீஸ்காரன: அனுப்பிவிட்டான். பயத்தாலும், திகிலாலும், அடியா லும் அலக்கழிக்கப்பட்ட அந்த மங்கையை அருகில் அழைத்தான். மூவரும் அமர்ந்து சிற்றுண்டியருந்தினர். வறுமை அவளே எவ்வளவோ வாட்டி வதைத்து விட்டிருந்தது. எனினும் வனப்புக் குன்ருதிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/38&oldid=759836" இலிருந்து மீள்விக்கப்பட்டது