பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி.சிற்றரசு 39. தினமும் அவள் வயிருர உண்டாளா என்பதும் சந்தே கந்தான். எனினும் அவளுடைய தேஜஸ் குறைய: வில்லை. பாவம் 'இவ்வளவு அழகான மலரைக் கையில் வைத்து அழகு பார்க்காமல் கசக்கிப் பிழிந்து விடுகிறது அவளுடைய வறுமை. அழகுதான் பெண்களுக்கு ஆபத்தா, ஆபத்துத்தான் உருவெடுத்துப் .ெ ப எண் களுக்கு அழகாயமைந்து விடுகிறதா என்ற சிந்தனைக் கிடையிலேயே இவ&ாக் கவனிக்கின்ருன் ஜே ல ள " ஓவியப் புலவனே இவளுடைய உருவத்தை எழுது ” என்று தன் நண்பன அழைத்து அவளுடைய உரு வத்தை எழுதச் சொல்லுகின்ருன் ஜோலா. அவள் தன்னுடைய வாழ்க்கை வரலாறுகளேச் சொல்லும்போது வ ர் த் ைத க ள் ஒட்டமில்லாமல் தேங்கித்தவித்து ஒன்ருேடொன்று பின்னிக்கொண்டு தழுதழுத்த குரலில் வருகின்றன. கண்ணிர் அருவிகள் அவளுடைய கன்னத்தின் அழகைக் கெடுத்து விடு கின்றன. தன்னுடைய பழைய நிலமைகள், புதிய சீரழிவுகள், பா ரீ க க் கு வரும்போது தன் வயது, வர ஏற்பட்ட காரணம் ஆகிய வரலாறுகளே எல்லாம் அழுகை எனும் அடைமழைக்கிடையிலேயே சொல்லித் தீர்த்துவிட்டாள். இதையெல்லாம் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஜோலா ஏழெட்டு தரம் விடவேண்டிய மூச்சையெல் லாம் ஒன்ருகச் சேர்த்து ஒரு பெருமூச்சாய் விட்டான். அந்தப் பெருமூச்சில் ஒரு பெருங்கதை பிறந்தது. இவளுடைய இடிந்த வாழ்விலிருந்து ஓர் சிறந்த இலக் கியம் பிறந்தது. அப்பேதைப் பெண்ணின் வாழ்வி லிருந்து பிரான்சின் போதை தெளிந்தது. உலக வர லாறே தன் கண்மன் தோன்றுவதைப்போல நினைத் --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/39&oldid=759837" இலிருந்து மீள்விக்கப்பட்டது