பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி.சிற்றரசு A . தாளன். ஜோலா என்பதற்காக யாரும் படிக்கவில்லை. எழுத்துக்கள், நானுவைப் பற்றியவை என்பதற்காகப் படித்தார்கள். இலக்கியக் சுவை மிகுதி, இன்பம் கரும் என்ற சந்தோஷத்தால் படிக்கவில்லை. இடிந்து குட்டிச் சுவராய்ப் போன ஒரு பேதைப் பெண்மணியின் வாழ்க்கை வரலாறு எனக் கண்ணிர் சிந்தச் சிந்தப் படித்தனர். இது சாகாவரம் பெற்ற நூல் என்பதற்காக யாரும் படிக்கவில்லை. சமூகக் கேடுகளேத் தர்க்கித் தகர்த்தெறி யும் தலே சிறந்த நூல் என்பதற்காகப் படித்தார்கள். உண்மை நாணு எங்கேயும் தங்க முடியாமல் விரட்டப் பட்டாள். ஆணுல், இந்த நானு, பனக்காரர்கள் பஞ்ச ணேயிலே, தலையணயின் கீழே, சீமாட்டிகளின் கைப் பைக்குள்ளே படுத்துக் கொண்டிருக்கின்ருள். கணவ னுக்குத் த்ெரியாமல் மனைவி வாங்குவாள். மனேவிக்குத் தெரியாமல் கணவன் வாங்குவான். இந்த இருவருக் 'கும் தெரியாமல் கிழமாமருைம் மாமியாரும் வாங்கு வார்கள். இவர்கள் அவ்வளவு பேருக்கும் தெரியாமல் வீட்டு வேலைக்காரன் வாங்குவான். ஒருவராவது நான வைப் பகிரங்கமாக வாங்கினர்களா என்ருல் இல்லை. ஆல்ை, ஒருவர் வீட்டிலாவது நாளு இல்லாமலிருந் தாளா என்ருல் அதுவும் இல்லை. எல்லாருடைய வீட்டி லேயும் நானு இருந்த்ாள். புத்தகக் கடைக்கு நானவை. வாங்குவதற்கென்றிே வருவார்கள். எடுத்த எடுப்பி, லேயே நானு ஒன்று கொடு என்று கேட்கமாட்டார்கள். வேறு எதை எதையோ புரட்டிப் பார்த்துக்கொண்டி ருந்துவிட்டு சுற்றுமுற்றும் யாருமில்லாத சமயம் பட்ார் என்று பணத்தைத் துர்க்கி எறிந்து நானவை வாங்கிக்கொண்டு சட்டைப்பையில், குடையில், குல்லர் வில், கூடையில் வைத்து மறைத்துக்கொண்டு போய் விடுவார்கள். பகிரங்கமாக வாங்கத் தைரியமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/41&oldid=759840" இலிருந்து மீள்விக்கப்பட்டது