பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 எமிலி ஜோலா - - 丁வாயில் செங்குருதி கொப்பளிக்கிறது. அப்படியும் வாழ்க் கையை நடத்தினுள் என்பதற்குப் பதில் நகர்த்தினுள் என்னலாம். இந்த விபசார வே லை யி ல் போலீஸ் அபாயத்திலிருந்து அடிக்கடி தப்ப வேண்டிய நிலை ஏற் படுகிறது. இதல்ை இவள் ஒரு போலீஸ் அதிகாரியையே கையில் போட்டுக்கொண்டு அவனுடைய உதவியால் பல்முறை அந்த அபாயத்திலிருந்து தப்பியிருக்கிருள். இந்த நிலையில் சில நாட்களில் தன் கணவன் வீட்டுக்கு வருவதற்குமுன் வந்து சேரமுடிவதில்லே. ஒரு நாள் இரவு அதிக நேரம் கழித்து வருகிருள். கணவன் என்ற பெயரோடு இவளேக் கொத்தித்தின்று கொண்டிருக்கும் காதலன், முன்பு இவர்களுடைய ஆரம் பச் சண்டைக்குக் காரணமாயிருந்த நடிகையோடு உள்ளே இருந்தான் வெளியே புறப்பட்டு விட்டாள் நானு, பழையபடி தெருவிலே அகலந்தாள். தன்னல் பலமுறை உதாசீனம் செய்யப்பட்ட மாப்பாட் கிடைத் தான். ஆர்லென்ஸ் என்னும் அமைதியான இடத்தில் அழகான மாளிகை அமைத்துத் தந்து இவளுடைய அபிமான கணவனுய் விட்டான். நடுத்தெருவில் அலேந்த நார்மனி, நவமணிகள் கொழிக்கும் செல்வச் சீமாட்டியாக பாரீஸ் நாகரிகத்தின் சாயலாக, அழகின் ராணிபோல் வீற்றிருந்தாள். இவளைப்போல் உடுத்து வது, அணிவது, அருந்துவது எல்லாம் மற்ற சீமாட்டி களால் காப்பியடிக்கப்பட்டது. எங்கே பார்த்தாலும் இவளுடைய படம். தன் பேரால் ஒரு பந்தயக் குதிரையை வாங்கிள்ை. மற்றக் குதிரைகளை ஒட்டத்தில் பின்னடையச் செய்து மங்காத கீர்த்தியோடு விளங்கியது குதிரை நானு. பொருமைக்காரர்கள் அதன் லாயத் துக்கே தி வைத்துக்கொளுத்தி அதையும் சாகடித்து விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/46&oldid=759845" இலிருந்து மீள்விக்கப்பட்டது