பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பி. சிற்றரசு *57 தலவலயும் வரும. ஆகவே, மு. த லி ல் மெதுவாகச் செலுத்துவார் டிரைவர். அது போய்ச் சேரவேண்டிய்; இடம் ஏழாயிரம் அடிகள்: நிலத்தின் கனத்தை 700 அடிகள் விட்டுவிட்டு அதன்கீழே 300 அடிக்கு ஒரு. நிலையம் இருக்கும். அங்கெல்லாம் தொழிலாளிகள்: இறங்குவார்கள். அது பல்வேறு பகுதி களு க்கு ப். போக வேண்டிய தொழிலாளிகளைப் பல நிலையங்களிலே இறக்கிவிடும். ரயில்வே நிலையத்தை ஸ்டேஷன் என்று சொல்வதைப் போல அதைப் பிளேட் (Plate) என்றழைக் கின்ருர்கள். இப்படி ஒருகேஜ் அடித்தளத்துக்குப் போய்ச்சேருவதற்குள் 10,12 இடங்களில் நின்று நின்று செல்லும். அப்படித் தொழிலாளிகளை எற்றிக்கொண்டு கீழே இறங்கும்போது அவர்கள் தங்கள் தங்கள் இஷ்ட தேவதைகளேக் கும்பிட்டுக்கொள்வது நமக்கே மனக் 'குழப்புத்தைக் கொடுத்துவிடும். - எனெனில் சுரங்கத்தில் செல்லும் தொழிலாளி ஒவ் வொருநாளும் செத்துச் செத்துப் பிழைக்கின்ருன். ஒவ் வொரு விடிையும் அவ்வளவு அபாயம் நிறைந்தது. உள்ளே சென்றவன் மீண்டும் உயிரோடு வெளியே வரு வ்ான என்பது சந்தேகந்தான். உள்ளே ெச ன் று விட்டால் பனியா, மழையா, காற்ரு, இரவா, பகலா ஒன்றுமே தெரியாது. ஒரே இருட்டுமயம். ஒவ்வொரு வரும் கண்டிப்பாகக் கையில் வி எ க் கை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே பாறைகள். அதை இந்திரத்தின் உதவியால் உடைக்கவேண்டும். தண்ணர் பல இடங்களில் ஊற்றுப்பெருக்கெடுத்து ஒடும். அந்தத் தண்ணீரை எல்லாம் மேலே அனுப்பிவிட்வேண்டும். ుణు இருந்து குடி தண்ணிரையும், சுவாசிக்கக் காற்றை யும் உள்ளே கொண்டுசெல்ல வேண்டும். இந்த இரண் டும் 7000 அடிகள் கீழே வருவதற்குள் சுடுதண்ணிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/57&oldid=759857" இலிருந்து மீள்விக்கப்பட்டது