பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 6}: வும் பொறுப்பான வேலைகளில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மனம்வ்ைத்தால் நாட்டையே மண்மேடாக்க முடியும். நாட்டைப் பிறருக்குக் காட்டிக்கொடுத்துவிட் முடியும். இராணுவத்தைப் பாழாக்கி மருந்துக்கிடங் கில் இவைத்து நாட்டைப் பாதுகாப்பற்றப் பாாரி நிலக்கு கொண்டுவந்துவிட முடியும். எதிரிகள் படை: யெடுக்கும்போது ஒன்றும் செய்யாம லிருந்து விட முடியும். ஆயுதசாலைகளைத் திறந்து விட்டு விட்டு இவர் களும் அவர்களோடு சேர்ந்துகொள்ள முடியும். இவ் வளவு சக்திவாய்ந்தவர்களாக இருக்கும் இந்த யூதர் களே அவசரப்பட்டு எதிர்த்து அபாயத்தில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. நாகரிகமான சதி செய்துவிடவேண் டும். அந்தச் சதியும் நாகுக்கானதாக, நாகரிகமானதாக நம்பத் தகுந்ததாக, ' நாட்டுக்கே பெருங் கேடு விளைந்து விட்டது, நாட்டாரே! ஒன்றுபடுங்கள் என்று அழைப்பு தாக இருக்க வேண்டும். நீதிமன்றம் ஏறியதாக இருக்க வேண்டும். நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும். இதில் நாம் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் சிலர் சதிசெய்து பல நாட்கள் சிந்தித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். போர் நடந்துகொண்டிருக்கின்ற இந்த நேரந், தான் சரியான நேரம். இதை விட்டால் டிரைபஸின், மேல் பழிசுமத்துவதற்கு வேறு நல்ல தருணம் கிடைக் காது. மேலும் போர்க் காலத்தில், குற்றச்சாட்டு, விசா ரனே, இர்ப்பு, தண்டனே எல்லாம் மின்னல் வேகத்தில்: முடிந்துவிடும். வழக்கைச் சீர்தூக்கிப் பார்க்கத்தக்கது. ஆதாரங்களைத் திரட்டுவதற்காகப் பல நாட்கள் திவன் கொடுக்கமாட்டார்கள். அதுவும் நாம்செய்யப்போகும்; சதிவேல் போருக்குச் சம்பந்தப்பட்டதாயிருந்தால், நாட்டின் பொது உயர் த ர நீதிமன்றம் விசாரிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/61&oldid=759862" இலிருந்து மீள்விக்கப்பட்டது