பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எமிலி ஜோலா எஸ்டரெஸி தன்கூலியாட்கள் மூலம் பிரெஞ்சு இராணுவ இரகசியங்கள் வெளியாகின்றன என்ற வதந்தி யைச் சிறுகச் சிறுகக் கிளப்பிவிட்டான். திடீரென ஒரு நாள் பிரெஞ்சு இராணுவ முகாமுக்கு ஜெர்மன் இராணுவ முகாமில் வேவுபார்க்கும் ஒற்றரால் தந்தி ஒன்று வருகிறது. அதில் பிரெஞ்சு இராணுவத்தின் இன்றியமையாத ரகசியங்கள் மூன்று வெளியாய்விட்ட தாக நம்பத்தகுந்த செய்தி கிடைத்திருப்பதாகக் குறிப் பிடப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி இரானுவ முகாமி லிருந்து குடியரசுத்தலேவருக்குக் கிடைக்கிறது. எப்படி இந்த ரகசியங்கள் வெளியேறி இருக்கமுடியும் ? யார் இதற்குப் பொறுப்பாளி ? இராணுவத் தலைவன் டிரைபஸ் தவிர வேறுயார் இதை இவ்வளவு தைரியமாகச் செய் திருக்கமுடியும்? அவன் ஒரு யூதன். பனுமா கம்பெனி யில் நடந்த மோசடிவழக்குக்காகத் தண்டிக்கப்பட்ட மூன்றுபூதஅதிகாரிகளே விடுவிப்பதற்காக, பிரெஞ்சு பட்டாளத்தை ஜெர்மன் நாட்டுக்குக் காட்டிக்கொடுத்து, அதன்மூலம் போர் பலமாக நடந்தோ, அல்லது பிரெஞ்சு நாடே அழிந்தோ போய்விடுமானுல் தன் இனத்தாரை விடுவித்துவிடலாம் என்று இந்த டிரைபஸ்தான் சதி செய்திருக்கின்ருன். இன்னும் இவனே வெளியேவிட்டு வைத்தால் அபாயம் அதிகரித்து நாடு அழிவது திண்ணம் எனத் துபம்போடுகின்றனர். ஒரு உயர்தர இராணுவத் தலைவனத் தக்க ஆதாரங் கள் எதுவுமில்லாமல் கைது செய்வதென்பது சட்டங்கள் உடனே தலையாட்டக்கூடிய செய்தியல்ல. தான் யாரைக் கைதுசெய்ய உத்தேசம் கொண்டிருக்கிறதோ அந்ந நபரைப்பற்றிய முன்பின் நடவடிக்கைகள்,அவன் சேவை யால் ஏற்பட்ட நன்மை, ைேமகள் அவ்வளவையும் பார்த்துத் தான் ஒருவனேக் கைது செய்யமுடியும். ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/66&oldid=759867" இலிருந்து மீள்விக்கப்பட்டது