பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 75. மான்கள்ே! என் தாய்நாட்டின் ஆணயாகச் சொல்லு, 'கின்றேன் நான் குற்ற்மற்றவன் இந்தக்குற்றங்களே. நான் செய்யாதது மாத்திரமல்ல, என் எண்ணத்தாலும் அவைகளைத்திண்ட்வில்லை. நான் உண்மையாகவே என்னை ஈன்ற பிரெஞ்சுநாட்டை எதிரிகளிடம் ஒப் படைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், இதைப் போன்ற ரக்சியக்கடிதங்களே எழுதி, அவைகளை ஜெர்மன் இராணுவ முகாமுக்கு அனுப்பி, அவர்கள் இந்த ரகசியங்களேயுணர்ந்தபின், நம்நாட்டின்மேல் படையெடுத்து அதன் பிறகு அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தர நான் இவ்வளவு மறைமுகமான வேலையைச் சுற்றி வளத்துக்கொண்டு வந்து செய்யவேண்டியதில்லை. சுமார் நாற்பதினுயிரம் போர் வீரர்களேயும், யுத்தத் தளவாடங்களையும், பீ ரங் கி ப் பட்டாளங்களையும், மருந்துக்கிடங்கையும், நான்கேட்டபோதெல்லாம் செல் வத்தையும், எ ன் னி ட ம் ஒப்படைத்திருந்தீர்கள். ஏன் இந்தப் பிரெஞ்சுநாட்டின் விதியை நிர்மாணிக்க வேண்டிய பெரிய பொறுப்பையே என்னிடம் ஒப்படைத் திருந்திர்கள். இவ் வ ள வு சத்திகளையும் வைத்துக் கொண்டிருந்த நான், எதிரிகள் படையெடுத்தபோது நான் ஒருவித இவிரமான நடவடிக்கையும் எடுக்காமல் படைகளைச் சரிவர நடத்தாமல் இருந்தாலும் நாம் தோற்றுப்போயிருப்போம். அப்போது என்மேல் அந்தக் குற்றம் சார்து. ஏனெனில் இவ்வளவு முன்னேற் பட்டோடு சதிசெய்ய நினைக்கின்ற நான். படைவீரர் கள் சோர்ந்துவிட்ட்ார்கள் என்று ஒரே வரிய்ை எழுதிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம். அவ்விதம் படைவீரர்கள் தோற்றதற்குக் காரணம் என்ன ? என்று என்னச் சமாதானம் கூறும்புடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/75&oldid=759877" இலிருந்து மீள்விக்கப்பட்டது