பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S3 எமிலி ஜோலா - இழு இழு இழுத்துக்கொண்டு வா. விடாதே. இங்கெல்லாம் தி வைக்கக் கூடாது. பராரிகளுக்குப் பாதுகாவல் தந்தவன் ஒருவன். பட்டாளத்தின் ரக்சி யத்தைப் பகை நாட்டுக்கு அனுப்பியவன் ஒருவன். ஆக இருவரும் இதைக் கேட்டு மனம் உடைந்து சாகட்டும். இராணுவ வீரர்கள், அரசியல் அதிகாரிகள், இலக்கிய கர்த்தாக்கள் வசிக்கும் இடங்களிளெல்லாம் இழுத்து வா. - நா ட் டி ன் கெளரவத்தை, செல்வர்களின் அந் தஸ்தை, சட்டத்தின் வன்மைடை, நீதியின் நேர்மையை குலே நடுங்கவைத்த கோடியவர்கள். அவர்களே உயி ரோடு பொசுக்க வேண்டியதற்கறிகுறியாக வைக்கோலால் செய்த இரண்டு கொடும்பாவிகள்ளக் கொளுத்துவோம். மங்காத கீர்த்திபெற்ற பிரான்சு நாட்டுக்கு ஒர் களங்கத்தை யுண்டாக்கிவிட்டனர். அதிமேதைகள் கூடி அளித்த தீர்ப்பை அவமதித்து, அரோரி பத்திரிக்கை யில் ஆவேச எழுத்துக்களே எழுதுகின்ருன், மின்னிய வாளேந்தி வீரநடை நடந்த இராணுவ வீரர்களை வம்புக் கிழுத்து, வீகைச் சாகப் போகின்ருன். பிரபல பிரென்சு நாட்டின் இராணுவ அதிகாரிகள் எங்கே, இந்த பராரி பேணு தாங்கிக்குப் புகவிடம் தந்த அரோரி பத்திரிக்கை எங்கே உயர்தர நீதிமன்றம் எங்கே ? இந்த கீழ்த்தர அணுதை எங்கே ? காகிதக் குப்பைகளைச் சேர்த்துக் கனல் மூட்டுகிருன். எவ்வளவு நேரம் எரியும். ஆதார மில்லாமலா அவனத் தண்டித்தனர். இவன், ஆவேசம் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு அவர்களேக் கண்டிக் கின்ருன். ஆவேசம் யாருக்கும் எளிதாக வரக்கூடியது. ஆனல் அறிவும் ஆராய்ச்சியும் அனைவர்க்கும் எளிதாக வரக்கூடியதல்லவே ? எரிமலையைப் பார்த்து, சிறு நரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/8&oldid=759882" இலிருந்து மீள்விக்கப்பட்டது