பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 எமிலி ஜோலா த்ாகவே கருதினர்கள். இராணுவ முகாமில், யூதர்கள் ஒழிக்ான்று எக்காளமிட்டனர். குடிவெறியால் எங்கே செல்கிருேம், என்ன செய்கிருேம் என்பதே தெரியாமல் இரண்டு மூன்று நாட்கள் பாரிஸ் பட்டணத்தையே பாழாக்கிவிட்டார்கள். ஒரு நாட்டுக்குத் தோன்ற வேண் டிய நல்ல அறிகுறிகள் எல்லாம் இந்த நாசகாரர் களால் மறைக்கப்பட்டுவிட்டன. வெறியர்கள் ஆடி ஒய்ந்தனர். இன்னும் ஒரே ஒரு நாள் கொண்டாட்டம் இருக்கிறது. அந்த நாள் தான் சிறையிலே இருந்து டிரிைபஸை டெவில்ஸ் தீவுக்குக் கொண்டுபோகக் கப்ப லேற்றப்படும் நாள். அந்த நாளேயும் கண்ணுல் கண்டு விட்டால் போதும். அதுவே யுத எதிர்ப்புச் சக்திக்குப் புத்துயிரளிக்கும் நாள், புனித நாள், பொன்னுள் என் றும், அன்று யார் யாரைச் சந்திப்பது, யார் வீட்டில் யாருக்கு விருந்து, எந்தவிதமான விருந்து என்றும் சந் தோஷமாக விரல்களை விட்டுப்பேசிக் கொண்டிருக் হেটো mলাr. சிறையில் சந்திப்பு இடையிலே இரும்புக் கம்பிகள். இப்பக்கம் மேடம் டிரைபஸ், உட்பக்கம் டிரைடாஸ். என்ன பேசுவார்கள் ? என்ன பேசுகின்ருர்கள் என்பதைக் கவனிக்க அங்கே ஒரு ஆள். லெளகீக சம்பந்தமாக அன்றி அரசியலைப் பற்றிப் பேசக்கூடாதே. மீண்டும் காண்பேன? மேடம் ! எப்படிச் சொல்லமுடியும் டிரைபஸ் ? காணமாட் டோம் என்று. நிச்சயமாகச் சொல்லமுடியாது டிரைபஸ். இது என் ஆறுதலுக்காகச் சொல்லும் வார்த்தை, மேடம் ! கால கா லும் பிரிக்கமுடியாமல் இதுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/85&oldid=759888" இலிருந்து மீள்விக்கப்பட்டது