பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 எமிலி ஜோலா இப்படி விம்மி வி ம் மி அழுதுகொண்டிருக்கின்ருய்த் பேதம்ை உள்ளத்துக்கே பெண்கள்.இதயந்தான்.இருப்: பிடம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். எனக்காகப்ப்ே யாருமே இல்லை என்கிருய். இதுவரை எனக்க்ாகப் பேசிய பிரபல வழக்கறிஞர் லபோரி இல்லையா? அழாதே; மதியை மேகம் நிரந்தரமாக மறைப்பதில்லை. அதுே போன்றது தான் என் நிலமையும்" என்று ஆறுதல் கூறி அனுப்பிவிட்டான். - * - . Fl i : இராணுவத் திடலில் தண்டனேயடைந்த இராணுவத் தலைவன் டிரைபஸ்ை டெவில்ஸ் தீவுக்குக் கொண்டுபோவதற்கு முன்பு போர் வீரர்கள் முன்னுல் அவனே அவமானப்படுத்தவேண்டு மென்று கருதி, அவனுக்குச் சிறையில் பழையபடி இரா. ணுவ உடைகளே மாட்டி, வாள் தொங்கவிட்டு, நாற்ப தாயிரம் போர்வீரர்கள் அணிவகுத்து நிற்கும் திடலுக் குக் கொண்டுபோய் நிறுத்தப்படுகின்றன். கர்னல் பக்ஷி என்பவன் டிரைபசுக்கு நேர ைவந்து நின்று அவன் ஆடைகளையும், இராணுவச் சின்னங்களை யும் ஒவ்வொன்ருகக் கழற்றிக் கடைசியில் அவன் இடுப் பில் தொங்கிக் கொண்டிருந்த உடைவாளத் தன் கால் முட்டியில் வைத்து இரண்டு துண்டாக உடைத்து வீசி எறிகின்ருன். ஏனென்ருல் அந்தத் துரோகி தொட்ட உடைவாளே வேறு யாரும் தீண்டக்கூடாதாம். வேண்டு மென்றே அவமானப்படுத்திவிட்டான். சராசரி ஒரு சாதாரணப் போர்வீரனுக்குக் காட்டும் அனுதாபத்தைக் கூட இவனுக்குக் காட்டவில்லை. தன்னைப் பார்த்த வுடனே எழுந்து நின்று தலைவணங்கும் மேன்மைக்குரிய தலைவனே இவ்வளவு கேவலமாக நடத்தினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/87&oldid=759890" இலிருந்து மீள்விக்கப்பட்டது